Changeloom Fellowship Programme 2019-20

Experience Nov 3, 2019

Language Vs Effort & Talent

முடியாது.... என்ன விட better aha english தெரிஞ்சவங்க நம்ம (OSF) team-la இருந்து apply பன்னுனா கண்டிப்பா நம்ம team select ஆகும். Bz வரப்போறது North India base பன்னுன organization. So full-aha english-laதா project aha explain பன்னனும் அப்டிங்குற thinking-தா 100% mind-ல போச்சு. .

But, தம்பி....வாய்ப்பில்லபா. it's time for u.... Apply பன்னுங்க.....என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் அப்டிங்குற surrounding voices team-ல இருந்து வந்துச்சு. So, Me and Dinesh apply பன்னோம் with full support of our team. Two set of interview & one field visit-ம் இருந்துச்சு. First interview-la ததபுத-தான். வாயில இருந்து காத்துதா வந்துச்சு. English வரல. அப்றந்தா தெரிஞ்சுது, அந்த interview எடுக்குற gang-la தமிழ் தெரிஞ்ச தெய்வம் ஒன்னு இருக்குனு. Translate பன்னுனாங்க. So interview success. 2nd interview-la அந்த தமிழ் தெய்வம் இல்ல.....

Changelooms

Dear OSF, நாங்க evaluate பன்றது உங்க project details-தா, English fluency aha இல்ல. So தப்பா இருந்தாலும் பரவால, உங்களுக்கு தெரிஞ்ச english-ல பேசுங்க. நாங்க understand பன்னிக்குறோம் அப்டிங்குற ஒரு குரல் காதுல கேட்டுச்சு. உடனே எங்க முகத்துல ஒரு சிரிப்பு....Start பன்னோம். நல்லபடியா field visit வரைக்கும் complete பன்னோம். Select-ங்குற result-ம் வந்தது.

6 நாள் training program-கு ready ஆனோம். haryana......flight.....travel இதெல்லாம் புதுசா தெரில. Bt அனுபவங்கள் புதுசா இருந்துச்சு. அங்க எங்கள பத்தியும், எங்க team-aha பத்தியும் வேற கண்ணோட்டத்துல சிந்திக்க வச்சாங்க. Yes, we r perfect on that field அப்டினு நெனச்சுட்ருந்ததெல்லாம், இல்ல அப்டினு identify பன்ன வச்சாங்க. அத நிவர்த்தி செய்யறதுக்கான வழியையும் கண்டுபிடிக்க முடிஞ்சது .Rock climbing, group discussion, feedback analyzing, leadership and energizer approach, program & volunteer and team management பத்தின இன்னும் சில விஷயங்கள தெரிஞ்சுக்க முடிஞ்சது. North India-ல எந்த contact-ம் இல்லாம இருந்த நாங்க, போனா invite பன்னி சப்பாத்தி போடுற அளவுக்கு contact aha develop பன்னிருக்கோம்னா பாத்துக்கோங்களேன். So, கடைசியா இந்த content-la என்னோட experience aha நா சொல்றது என்னனா திறமைக்கும், குழு முயற்ச்சிக்கும் language ஒரு தடையா (98%) இருக்காது. துனிவோடு முற்பட்டா கண்டிப்பா learning கிடைக்கும் with சப்பாத்தி.... அப்டிங்குறதுதாங்க.

Tags