Democrazily Science – வெகுமக்கள் அறிவியல் முகமை அறிவியல் முகாம் - 2021

அனைவருக்கும் வணக்கம்,

குழந்தைகளுக்கான அறிவியல் கல்வியை வடிவமைப்பதில் கடந்த பல ஆண்டுகளாக களத்தில் உங்களோடு இணைந்து பணியாற்றிவருவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த இரு ஆண்டுகளாக பெருந்தொற்று காலகட்டங்களில் குழந்தைகளுடன் நேரடியாக இணைந்து பணியாற்றுவதில் பெரும் பின்னடைவு இருந்தபோதிலும், அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் குழந்தைகளோடு உரையாடினோம், வான்நோக்கினோம், விண்கற்களை கண்டறிந்தோம். பெருந்தொற்று காலகட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது உழைக்கும் அடித்தட்டு மக்களும், அவர்களது குழந்தைகளும் தான்.

இந்தச் சூழலில்கல்விக்கான வாய்ப்புகளையும், கல்வியின் மூலமாக விண்ணையும் எட்டிபிடித்துவிட வேண்டும் என்ற பேராவலுடன் இருந்த இளைஞர்களையும், குழந்தைகளையும் பெங்களூரு நகரில் கண்டறிந்தது எங்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. காலம் காலமாக அனுபவித்து வரும் சமூக அழுத்தத்தை உடைத்தெரிந்து துளிர்விடும் குழந்தைகள். அவர்களுக்கான கல்வியின் முக்கத்துவத்தை உணர்ந்து செயல்பட எத்தனித்தோம். கடந்த ஆண்டு மேலும் அவர்களை ஆர்வப்படுத்தும் விதமாக “வானவியல் - Astronomy” செயல்பாடுகள் பல செய்து வந்தோம்.

அதன் தொடர்ச்சியாக தற்பொது வெகுமக்கள் அறிவியல் முகமையின் அறிவியல் முகாம் - 2021ஐ திட்டமிட்டுள்ளோம். எதிர்வரும் அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் இந்த முகாமானது கட்நாடகா மாநிலத்தில் உள்ள தும்கூரு மாவட்டத்தில் தேவராயனதுர்கா எனும் மலையடிவார கிராமத்தில் நடைபெறவுள்ளது. சுமார் 15 குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த முகாமானது வெறுமனே அறிவியலை மட்டும் பேசக்கூடிய நிகழ்ச்சியாக இருக்காது, அறிவியலோடு, தலைமைபண்பை வளர்ப்பது, முன்முயற்சியோடு சோதனைகளை முன்னெடுப்பது போன்ற பலவற்றையும் கற்றுத்தர திட்டமிட்டுள்ளோம். இந்த முகாமில் உங்களது பங்கேற்பும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். உங்களது பங்கேற்பு, குழந்தைகளுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் வாழ்த்து செய்தி அனுப்புவதாகவோ, அல்லது அவர்களது வளர்ச்சி சார்ந்து ஏதேனும் செயல்பாடுகளை செய்து ஊக்கப்படுத்துவதாகவோ, அல்லது இந்த நிகழ்ச்சிகான ஒருங்கிணைப்புக்கு சுமார் ரூபாய் 12000 வரை திட்டமிடப்பட்டுள்ளது, இந்த நிதியை திரட்டுவதிலோ உங்களது பங்களிப்பை செலுத்தலாம். ஆவலுடன் உங்களது பதில்களுக்காக காத்திருக்கிறோம். நேரம் ஒத்துழைக்கும்பட்சத்தில் நீங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுகிறோம்.

Bank details are here

Account Number: 800010110009983

Account Name: Open Space Foundation

Bank: Bank of India

IFSC: BKID0008000

--

மேலும் விவரங்களுக்கு

வெகுமக்கள் அறிவியல் முகமை - Democrazily Science

Open Space Foundation

https://blog.openspacefoundation.in

Ph: +91 8754778345

contact@openspacefoundation.in