Gender Talks in Tamil - 09: Assigned gender, gender variance, and non-binary identities | பாலினத்தின் இரு நிலைத் தன்மை & பாலின வேற்றுமைகள்
”இரு நிலைத் தன்மை என்பதே அறுவருப்பானது, என்னை அடையாளப்படுத்திட என்னை தவிர யாருக்கும் உரிமையில்லை, நான் எனது உணர்வுகளை வெளிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லையெனில் விலகிக்கொள்ளுங்கள்” என தனது கருத்துகளை கூற துவங்கினார் நமித்தா அவர்கள்.
ஒரு சமூக போராளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சிறப்பு அழைப்பாளர் தனது வாழ்க்கையின் பலகட்ட புரிதல்களை, குறிப்பாக இருநிலைத் தன்மையின் வெட்கக்கேடன நிலைகளை, அதனை மட்டுமே நம்பிக்கொண்டு நகரும் நாற்றமெடுக்கும் சமூக அவலங்களை பட்டியலிட்டு பேசினார்கள்.
நமக்கு தெரிந்ததெல்லாம் ஆண், பெண் எனும் இரு பால்நிலை மட்டும் தான் என்றால், இதுவரை உங்களது காது அறிவியலை கேட்பதை, புரிந்துகொள்வதை நிறுத்திவைத்துள்ளது என்று பொருள். 100க்கும் அதிகமான பால் வகைப்பாடுகள் இருக்கின்றன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் பலவகைப்பட்ட உணர்வுகள் இருக்கின்றன. ஒருவர் தன்னை அடையாளப்படுத்த முதன்மையான தடையாக இருப்பதே இந்த இரு பால் நிலைத் தன்மை தான், என்பன போன்ற பல கருத்துகளை அருமையாகவும், பல சொற்பதங்களை அறிமுகப்படுத்தியும் கருத்துகளை பதிவுசெய்தார் நமித்தா அவர்கள்.
அவர்களை தொடர்ந்து தீப்தி அவர்கள், எப்படி ஒரு குடும்ப சூழல் தனது அடையாளங்களை வெளிக்காட்டுவதை தடுக்கின்றது, அவ்வாறு வெளிக்காட்டும் போது எப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பனவற்றை விளக்கி பேசினார்கள்.
இது ஒரு கண் திறப்பு வகுப்பாக தான் அமைந்தது. இன்னும் இந்த தலைப்புகளின் பேசி, விவாதிக்க பல கேள்விகளும், கருத்துகளும் உள்ளன, என்பதே கடைசியாக மிஞ்சியது. அவ்வளவு ஆழமான தலைப்பாக அமைந்தது. இருப்பினும் தங்களது நேரத்திற்குள் அருமையாக தேவையானவற்றை பகிர்ந்துகொண்ட பேச்சாளர்களுக்கு நன்றி..
மீண்டும் அடுத்த வாரம் இந்திய இலக்கியங்களில் பாலின பால்-ஈர்ப்பு குறித்து விவாதிக்கவுள்ளோம். அவசியம் கலந்துகொள்ளவும்.
நன்றி !
பதிவு செய்யப்பட்ட கானொலி இதோ. உங்களது கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றன.