Free Software for Educational Institutions

கற்றற்ற மென்பொருட்கள் குறித்த பயிற்சியின் 3வது வாரம் இது. இந்த வாரம் என்ன தலைப்பில் பேசலாம் என திட்டமிட்ட போது கிடைத்தது தான் இந்த அருமையான தலைப்பு. கட்டற்ற சுதந்திரமான மென்பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை குறித்து நாம் முன்பே பேசியிருந்தோம். ஆனாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.

ஒரு சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் அச்சமூகத்தின் சிந்தனையை தூண்டும் கல்வி நிறுவனங்கள் முதலில் மாற்றத்திற்கு உட்பட வேண்டும். இன்றும் பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் தங்களது கணினி ஆய்வகத்தில் உள்ள கணினிகளில் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்திவருகின்றன. அவ்வாறு பயன்படுத்தும் இயங்குதளத்திற்கு முறையாக கப்புரிமை விதிகளோ, உரிமைகளோ பெறப்பட்டனவா என்றால் கேள்விக்குறி தான் மிஞ்சும்.

கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்கு மிகப்பெரிய அளவிலான சுதந்திர மென்பொருட்களும், வன்பொருட்களும் பொது உரிமத்தின் கீழ் உள்ளன. அவற்றை அறிமுகம் செய்வதன் மூலமாக ஒரு கல்வி நிறுவனத்தை கட்டற்ற மென்பொருட்கள் இயங்கும் கல்வி கூடமான மாற்ற முடியும்.

இந்த நிகழ்ச்சி குறித்து ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பேசும் போது உடனடியாக இசைவு கிடைத்தது. நிகழ்ச்சியை திட்டமிட்டோம். அதனடிப்படையில் அக்டோபர் 4- ம் தேதி அன்று கல்விகூட செயல்பாடுகளுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களை அறிமுகப்படுத்தி Chiguru நிறுவனத்தின் சார்பாக ராம் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.

நீங்களும் கேட்டுபாருங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன கானொலியை. நிச்சயம் உங்களுக்கும் உதவலாம்.

நன்றி !