Gender Talks in Tamil | பால், பாலினம், பாலியல் குறித்து பேசுவோம்

பாலியல் பேசுவோம் | Gender Talks in Tamil

அறிவியல் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை கண்ட நாம் இன்னும் சமூக சமத்துவத்தில் 2000 ஆண்டுகள் பிந்தங்கி இருக்கிறோம். நாம் வீடுகளில் கூட இன்னும் சமத்துவம் உருவாகவில்லை. “அம்மா”எனும் சொல் எவ்வளவு புனிதத்தன்மையோடு பார்க்கப்படுகிறதோ அதே அளவிற்கு, அதைவிட அதிகமாகவும் சுரண்டப்படுவதும் அம்மாவை தான். காலை எழுந்தது முதல் இரவு உறங்கப்போகும் முன்வரை தொடர்ச்சியாக வேலை வேலை அனைத்தையும் இழுத்து போட்டு செய்யும் ஒரு அடிமையை போல தான் நம் வீடுகளில் “அம்மாகள்”  உள்ளனர்.

வீடு எனும் சிறைச்சாலையில் அவர்களை மூழ்கச் செய்தது யார்? வரலாற்றின் பல பகுதிகளில் பெண்களின் செயல்பாடுகளை குறித்து வாசிக்கும் போதெல்லாம் மனதில் உருவாகும் ஒரே ஒரு கேள்வி, “இந்த அடிமை உளவியலை யார் பெண்கள் மத்தியில் விதைத்தது?” இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
வீட்டுச்சூழலே இந்த நிலையெனில், சமூகத்தின் நிலையை விவரிக்க வேண்டுமா என்ன? தினம் தினம் பெட்ரோல் விலை உயர்வு செய்தி வருகிறதோ என்னவோ, சிறுமி முதல் கிழவி வரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டர்கள் என்ற செய்தி நம் காதுகளை அடையாமல் இல்லை. அப்படியே ஒரு செய்தி நமது காதுகளை எட்டும் போது நாமும் என்ன செய்துவிடுவோம்? அதிகபட்சம் ஒரு உச்சுக்கொட்டிவிட்டு, ஒரு அனுதாபத்தை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிட்டு அடுத்த செய்தியை வாசிக்க சென்று விடுவோம்.

அப்படி அடுத்த செய்தி நோக்கி செல்லும் நபராக நீங்கள்? என்னால் என்ன செய்துவிட முடியும் என அங்கலாய்க்கும் நபரா நீங்கள்? இல்லை, உங்களை மிகவும் நல்லவர், யாரையும் வன்புணர்வு என்னத்தோடு பார்க்கமாட்டேன் என நினைத்துக்கொண்டிருக்கும் நபரா நீங்கள்? வாருங்கள் சோதித்து பார்க்கலாம்.

நாம் வளர்ந்து வந்த சமூகம் நமக்கு ஒரு புரிதலை நமது பொது புத்தியில் திணித்துள்ளது. அந்த பொது புத்தி என்ன சொன்னலும் அது சரியாக தான் இருக்கும் என குடுட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறோம். அதனை உடைத்துவிட்டு வெளியே வர முதலில் நாம் நமது புரிதலில், பொது புத்தி எனும் கசடுபடிந்த படிவுகளை துடைத்தெறிய வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பாக தான் Gender Talks in Tamil எனும் பாலியல் பேசுவோம் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக் நமது பொது புத்தியின் கசடை துடைப்பது மட்டுமல்லாமல், நமது சிந்தனையில் ஒரு மாற்றத்தை உருவாக்கி, அறிவியல் பூர்வமாக பால் என்றால் என்ன? பாலினம் என்றால் என்ன? பால் ஈர்ப்பு என்றால் என்ன? இவற்றை சார்ந்துள்ள உளவியல்கள் என்ன? என்பன போன்ற பலவற்றையும் பேசிட, விவாதித்திட, எழுதிட, படங்கள் வரைந்திட, மாற்று தளங்களை உருவாக்கிட திட்டமிட்டுள்ளோம்.

இந்த நிகழ்ச்சியானது Open Space Foundation, நிறங்கள் தொண்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைகழகத்தின் மகளிரியல் துறையும் இணைந்து நடத்தும் ஒரு கூட்டு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வயது வரம்புகள் எதுவும் இல்லை. ஆர்வமிருக்கும் நண்பர்களை அனைவரையும் இணைந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

இந்த நிகழ்ச்சியானது 30 வாரங்கள் வரை செல்லக்கூடியது. அதேபோல் சில செயல்திட்டங்களையும் நாம் உருவாக்கவுள்ளோம். ஏனெனில் வெறுமனே விவாதித்துவிட்டு மட்டும் செல்வது என்பது கடலில் கலந்த நீர் போலத்தான். இந்த செயல் திட்டங்களிலும் நீங்கள் இணைந்துகொள்ளலாம்.

இதுவரை நான்கு நிக்ழ்ச்சிகள் வரை நடைபெற்றுள்ளது. இன்னும் 25 வாரங்கள் உள்ளன. கடந்த 4 நிகழ்ச்சிகளையும் பார்க்க,

  1. பாலினத்தை சமூகமயப்படுத்துவோம் - https://youtu.be/1h2eW-Ibmlw
  2. பாலினமும் கலாச்சாரமும் - https://youtu.be/36bhiRbZcSA
  3. பால், பாலினம் குறித்த விவாதம் - https://youtu.be/swMI7M-Pllo
  4. பாலின சமத்துவம்  - https://youtu.be/I0w07DAOleU

ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளவும்: https://cloud.voidspace.xyz/apps/forms/pz8zT6y4FwxN9S3d

அடுத்த வார (15 நவம்பர் 2020) நிகழ்ச்சிக்கான அழைப்பு இதோ,

மேலும் விவரங்களுக்கு

https://openspacefoundation.in/

https://blog.openspacefoundation.in/

contact@openspacefoundation.in

+91 8754778345