Gender Talks in Tamil - 05: Introduction to Intersex - இடைபாலர் - ஒரு அறிமுகம்
இடைபாலர் - ஒரு அறிமுகம் (Introduction to Intersex)
Gender Talk நிகழ்ச்சியின் 5வது வாரம் இது. இந்த வாரம் இடைபாலர்கள் குறித்த அறிமுக வகுப்பு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆய்வாளர் நீரஜா சஜன் அவர்கள் கலந்துகொண்டார்கள். இடைபாலினர் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் நீரஜா, மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார்.
நாம் அனைவரும் மாறியபாலினத்தவர்கள் குறித்து அறிந்திருக்கலாம். அவர்களை திருநங்கை, திருநம்பி என அழைக்கின்றோம். ஆனால் இடைபாலினத்தவர்கள் குறித்த அறிமுகம் நம்மில் பலருக்கும் அரிதானதாக இருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் இடைபாலர்கள் என்பது புதுவிதமாக இருந்தது என்பதை அவர்களது கேள்விகளிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.
ஆம், இன்றைய தலைப்பு நமது நாட்டிற்கும் கூட புதுவிதமானது தான். ஏனெனில் இன்றும் நாம் விண்ணப்பிக்கும் பல படிவங்களில் பால் - பாலினத்திகும் வேறுபாடு தெரியாமல் தான் கேள்விகள் கேட்கப்படுகிறது. அவ்வாறே கேள்விகள் இருக்கும் போதிலும் அதில் ஆண், பெண் என்ற பதிகளை தவிர வேறு எதையும் பதிவிடமுடியாமல் தான் இருக்கும். இந்த ஒரு அறிமுகத்தோடு தான் நீரஜா அவர்கள் தனது உரையை துவங்கினார்கள். இடைபாலர்கள் எவ்வாறு அறிவியல் ரீதியாக தோன்றுகிறார்கள். அவர்களை இந்த சமூகம் எவ்வாறு ஒதுக்கிவைத்துள்ளது. அவர்களது மன ரீதியான பிரச்சனைகளை துளியும் அளவிடாது எவ்வாறு கொள்கை முடிவுகளை எடுக்கிறார்கள், என்பன போன்ற பல தகவல்களையும் முன்வைத்தார்கள்.
அருமையான நிகழ்ச்சியாக அமைந்தது. விடுமுறை நாட்களில் பொதுவாக பலரும் வரமாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பை நீக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பும், கேள்விகளும் அமைந்தது.
இந்த நிகழ்ச்சியானது பதிவு செய்யப்பட்டுள்ளது. கேட்க விரும்பும் நண்பர்கள் கேட்டுபயனடையவும். கேள்விகள் இருப்பின் தெரியப்படுத்தவும். நிச்சயம் விவாதிக்கலாம்.
நீங்களும் கலந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களது விருப்பத்தை இந்த விண்ணப்ப படிவத்தில் நிரப்பவும். https://cloud.voidspace.xyz/apps/forms/pz8zT6y4FwxN9S3d
நன்றி !