KONGADA SCIENCE FEST

சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள அழகான மழைகிராமமான கொங்காடா அந்தியூரிலிருந்து மைசூரு செல்லும் வழியில் அமைந்துள்ளது. பழங்குடியின மக்களை கொண்டுள்ள இந்த கிராமத்தில் சுடர் தொண்டு நிறுவனத்தின் மூலமாக “உண்டு உறைவிடப் பள்ளி” ஒன்றும் செயல்பட்டு வருகிறது. சுற்றுபகுதியில் உள்ள மற்ற சில மழை கிராமத்து குழந்தைகளும் இந்த பள்ளியில் தான் கல்வி பயில்கிறார்கள். இந்த குழந்தைகளுகாகவே திட்டமிடப்பட்ட பாடங்கள், பாடல்கள் என பல புது முயற்சிகளை கொண்ட மாதிரி பள்ளி போல தெரிந்தது இப்பள்ளி.

சுமார் 50 மாணவ மாணவிகள் கல்வி பயில்கிறார்கள். எங்களது நீண்ட நாள் கனவான, மழைகிராமத்து மாணவர்களுக்கு அறிவியல் திருவிழா நடத்திட வேண்டுமென்பது, அதனை இன்று முகவும் சிறப்பாக நடத்தியுள்ளோம். இந்த திட்டத்தின் படி அதிகாலை விரைவாக தயாராகி அந்தியூர் வழியாக கொங்காடா மழை கிராமத்தை சுமார் 11.00 மணியளவில் அடைந்தோம். அங்கு இதுவரை வடிவமைக்கபடாத நவீன வளர்ச்சிகள் சிதைக்காத குழந்தைகளை பார்த்தோம். மிகவும் மகிழ்ச்சியாக ஓடி, ஆடி விளையாடும் அக்குழந்தைகள் இதுவரை எவ்விட தேர்வுகளையும் பார்த்ததும் இல்லை, தேர்வுகள் எனும் ஆயுதம் அவகளை கொலை செய்ததும் இல்லை.

இது மாதிரியான குழந்தைகளுக்கு அறிவியல் திருவிழா நடத்திட வேண்டுமென்ற கனவு ஒருவழியாக நிறைவேறியது. முதலில் குழந்தைகளுடன் சிறிது உரையாடினோம். அவர்களது வாழ்க்கைமுறை, அவர்களது ஆர்வங்களை புரிந்துகொள்ள இந்த முன் உரையாடலை பயன்படுத்திக் கொண்டோம். அதனை தொடர்ந்து குழந்தைகளை மூன்று குழுக்களாக பிரித்து அறிவியல் திருவிழாவை துவங்கினோம்.

அறிவியல் திருவிழாவின் வாயிலாக குழந்தைகளிடம் அவர்களது சுகாதாரம் மற்றும் முன்னேற்றம் குறித்தும், விழையாட்டு வழி அறிவியல் குறித்தும் தொலைநோக்கி மூலமாக வானின் அதிசயங்களை பார்வையிடுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதுவரை தொலைநோக்கியை அறவே பார்த்திடாத குழந்தைகள் முதன் முதலாக தொலை நோக்கிகளை பார்த்ததும் மிகவும் குஷியாகிவிட்டார்கள்.

தொடந்து மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட திட்டம் நாள் முழுவதும் குழந்தைகளை மகிழ்ச்சியோடும், கல்வி கற்க வேண்டும் என்ற ஆரவத்தோடும் வைத்து கொண்டது. இந்த திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட காரணமாகிய வேர்கள் திட்டங்களுக்கும் அதன் ஒருங்கிணைப்பாளருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கொங்காடா கிராம அறிவியல் திருவிழா சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள அழகான மழைகிராமமான கொங்காடா அந்தியூரிலிருந்து மைசூரு செல்லும் வழியில் அமைந்துள்ளது. பழங்குடியின மக்களை கொண்டுள்ள இந்த கிராமத்தில் சுடர் தொண்டு நிறுவனத்தின் மூலமாக “உண்டு உறைவிடப் பள்ளி” ஒன்றும் செயல்பட்டு வருகிறது. சுற்றுபகுதியில் உள்ள மற்ற சில மழை கிராமத்து குழந்தைகளும் இந்த பள்ளியில் தான் கல்வி பயில்கிறார்கள். இந்த குழந்தைகளுகாகவே திட்டமிடப்பட்ட பாடங்கள், பாடல்கள் என பல புது முயற்சிகளை கொண்ட மாதிரி பள்ளி போல தெரிந்தது இப்பள்ளி.             சுமார் 50 மாணவ மாணவிகள் கல்வி பயில்கிறார்கள். எங்களது நீண்ட நாள் கனவான, மழைகிராமத்து மாணவர்களுக்கு அறிவியல் திருவிழா நடத்திட வேண்டுமென்பது, அதனை இன்று முகவும் சிறப்பாக நடத்தியுள்ளோம். இந்த திட்டத்தின் படி அதிகாலை விரைவாக தயாராகி அந்தியூர் வழியாக கொங்காடா மழை கிராமத்தை சுமார் 11.00 மணியளவில் அடைந்தோம். அங்கு இதுவரை வடிவமைக்கபடாத நவீன வளர்ச்சிகள் சிதைக்காத குழந்தைகளை பார்த்தோம். மிகவும் மகிழ்ச்சியாக ஓடி, ஆடி விளையாடும் அக்குழந்தைகள் இதுவரை எவ்விட தேர்வுகளையும் பார்த்ததும் இல்லை, தேர்வுகள் எனும் ஆயுதம் அவகளை கொலை செய்ததும் இல்லை.             இது மாதிரியான குழந்தைகளுக்கு அறிவியல் திருவிழா நடத்திட வேண்டுமென்ற கனவு ஒருவழியாக நிறைவேறியது. முதலில் குழந்தைகளுடன் சிறிது உரையாடினோம். அவர்களது வாழ்க்கைமுறை, அவர்களது ஆர்வங்களை புரிந்துகொள்ள இந்த முன் உரையாடலை பயன்படுத்திக் கொண்டோம். அதனை தொடர்ந்து குழந்தைகளை மூன்று குழுக்களாக பிரித்து அறிவியல் திருவிழாவை துவங்கினோம்.             அறிவியல் திருவிழாவின் வாயிலாக குழந்தைகளிடம் அவர்களது சுகாதாரம் மற்றும் முன்னேற்றம் குறித்தும், விழையாட்டு வழி அறிவியல் குறித்தும் தொலைநோக்கி மூலமாக வானின் அதிசயங்களை பார்வையிடுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதுவரை தொலைநோக்கியை அறவே பார்த்திடாத குழந்தைகள் முதன் முதலாக தொலை நோக்கிகளை பார்த்ததும் மிகவும் குஷியாகிவிட்டார்கள்.             தொடந்து மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட திட்டம் நாள் முழுவதும் குழந்தைகளை மகிழ்ச்சியோடும், கல்வி கற்க வேண்டும் என்ற ஆரவத்தோடும் வைத்து கொண்டது. இந்த திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட காரணமாகிய வேர்கள் திட்டங்களுக்கும் அதன் ஒருங்கிணைப்பாளருக்கும் மனமார்ந்த நன்றிகள். நன்றி