National Science Day Celebration 2019 @ Madurai

தொலைநோக்கியைக் கொண்டு வானத்தை பார்வையிடுவது என்பது எப்பொழுதுமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகவே அமைகிறது. அந்தவகையில் இம்முறை எங்களுடைய தொலைநோக்கியின் பார்வை பகல்பொழுது என்பதால் சூரியன் என்ற நட்சத்திரத்தை நோக்கி அமைந்தது. மேலும் அப்பகல்பொழுது தேசிய அறிவியல் தினம் என்பதால் பல மாணவர்களுடைய அறிவுதாகத்தை தனிக்கும் வகையில் செந்தாமரை கலை மற்றும் அறிவியல் என்ற தனியார் கல்லூரியின் இயற்பியல் துறை வேண்டுகோளுக்கினங்க இவ்வான்நோக்குதல் நிகழ்வு அங்கு ஒருங்கினைக்கப்பட்டது. அக்கல்லூரி மட்டுமல்லாது அச்சுற்றுவட்டப் பகுதிகளிலுள்ள மற்ற பள்ளி மாணவ, மாணவிகளும் இதில் பங்கேற்று கண்டுகளித்து வியப்படைந்ததோடு மட்டுமல்லாமல், நட்சத்திரம், அதன் தோற்றம் மற்றும் அதன் நிலைபாடு ஆகியவற்றை புரிந்து கொன்டதோடு வானம் பற்றிய தேடலுக்கான தொடக்கத்தோடு விடைபெற்றுச்சென்றனர். மாணவர்கள் செலுத்திய ஆர்வத்தின் வெளிபாடாக அந்நிகழ்வு மேலும் ஒருநாள் அங்கு தொடர வழியாக அமைந்தது. இந்த இரு நாட்களில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அறிவியல் தொடர்பான கேள்விகளோடு, வானவெளி பற்றியும் அறிந்துகொள்ள முற்பட்டது என்பது மனநிறைவு அளிக்கக் கூடய செயலே ஆகும்.

மேலும் தங்கள் பகுதியிலும் தொலைநோக்கி மட்டுமல்லாது இதுபோன்ற பல செயல்முறை விளக்கத்துடன் கூடிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்க அனுகவும்.