Night Sky observation @ Aditya Park Apartment, Bangalore

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இரவு வான் நோக்குதல் நிகழ்ச்சியை துவங்கியுள்ளோம். கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நாங்கள் மட்டுமே பார்த்து ரசித்த வானத்தை குழந்தைகளுக்கும் காண்பிக்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது.

வியாழன் - சனி கோள்களின் பேரினைவு முடிந்து ஒரு தினம் மட்டுமே முடிவடைந்திருந்ததால் வியாழனும், சனிக்கோளும் ஒருசேர தொலைநோக்கியின் மூலம் பார்க்க முடிந்தது. சனிக்கோளின் வளையத்தை பார்த்த குழந்தைகளின் கொண்டாட்டத்திற்கு அளவில்லை.

குழந்தைகளை தொடர்ந்து அவர்களது பெற்றோர்களும் பெருங்கோள்களின் பேரிணைவை கண்டு ரசித்தனர். தொடர்ந்து நிலவை காண்பிக்க தொலைநோக்கியை திருப்பிய போது அனைவருக்கும் குதூகலம் மீண்டும் தொற்றிக்கொண்டது. முதன் முறையாக் தொலைநோக்கியால் நிலவின் அலங்கோலமான வடிவத்தை பார்த்த போது வாயடைத்துபோனார்கள் எனலாம்.

இதுவரை புத்தகங்களில் மட்டுமே பார்த்து ரசிக்க கிடைத்த நிலவு இன்று கண்களுக்கு அருகில் தொலைநோக்கியால் பார்க்க கிடைக்கவுமே, குழந்தைகளும், பெற்றோர்களும் மகிழ்ச்சி கூத்தாடினார்கள்.

உங்களுக்கும் இதுபோன்ற வான்நோக்குதல் நிகழ்ச்சியில் பங்குபெற ஆர்வம் இருப்பின் தொடர்புகொள்ளவும்.

contact@openspacefoundation.in | +91 8754778345

நன்றி !