பாலினம் பேசுவோம் - 19: தலித் பெண்ணிய அடையாள அரசியல்
பாலினம் பேசுவோம் நிகழ்ச்சியின் 19வது வார நிகழ்வு இன்று. இந்த நிகழ்ச்சியில் முனைவர் அரங்க மல்லிகா அவர்கள், பேராசிரியர், தமிழ் துறை, எத்திராஜ் கல்லூரி, சென்னை அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக தலித் பெண்ணிய அடையாள அரசியல் எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். சமூகத்தின் ஒடுக்கப்பட்டவ்ர்கள், பட்டியலின சமூகத்தை சார்ந்த பெண்கள் பணியிடங்கள், கல்வி நிலையங்கள், பொதுஇடங்கள் என எங்கும் பாரபட்சமின்றி பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் வன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்.
சட்ட ரீதியாக பாதுகப்பு வழங்கும் ஏற்பாடுகள் ஏட்டளவில் தான் உள்ளன. நடைமுறையில் அவை செல்லுபடியாகவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை தான் என்பன போன்ற கருத்துகளை பதிவுசெய்திருந்தார்கள்.
அவர்களது குழு சிறப்புரையையும் காண கீழே இணைக்கப்பட்டுள்ள கானொலியை பயன்படுத்தவும்.
நன்றி !