பாலினம் பேசுவோம் - 20: பாலியல் தொழிலா? அடிமைதனமா?
பாலியல் தொழிலா? தலைப்பை வாசித்தவுடன் உங்களுக்குள் ஏதேனும் வெறுப்பு ஏற்படுகிறதா? உங்களது மூளையில் பதிவாகியுள்ள இடர்களை சற்று நேரம் ஒதுக்கிவைத்து விட்டு இந்த நிகழ்ச்சியின் சாரம்சத்தை புரிந்துகொள்ள முயலவும்.
பொதுவாகவே சமூக அரங்கில் பாலியல் தொழில் என்பது அங்கீகரிக்கப்படாத ஒன்று. அப்படி இருக்கையில் நாம் எப்படி அதைபற்றி பேசமுடியும். இப்படிப்பட்ட சூழலில் ஒரு கேள்வி முதன்மையானதாக எழவில்லையா உங்களுக்குள், “யார் இந்த பாலியல் தொழிலாளிகள்?”. இவர்கள் எப்படி இந்த தொழிலுக்கு வந்தார்கள்? யார் இவர்களை இந்த நிலைக்கு தள்ளியது.
தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இது போன்ற பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுடன் அவர்களது உரிமை, மருத்துவம், வாழ்வாதார மேம்பாடு போன்ற அரங்கங்களில் பணியாற்றிவரும் மீரா, வின்ஸ் அமைப்பு, திருப்பதி அவர்கள் இந்த வார பாலினம் பேசுவோம் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்கள்.
அவர்கள் விவரித்தவற்றை கேட்கும் போதே மனதில் ஒரு வித குற்றவுணர்ச்சி ஏற்படுவதை உணரலாம். பல பெண்கள் இந்த பாலியல் தொழிலில் அவர்களது குடும்ப உறுப்பினர்களாலேயே தள்ளப்படுகிறார்கள். பலருக்கும் தனது மருத்துவம் பார்க்க கூட வழியற்றவர்களாக இருக்கிறார்கள். இன்னும் இது போன்ற பல ஆவலங்களை மீரா அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள்.
அவரது முழு கருத்துரையையும் கானொலிவடிவில் கேட்டிட கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
நன்றி !