Gender Talks in Tamil - 11: Beyond the binary: How development data impacts Gender Justice

gendertalks Dec 28, 2020

ஆண்-பெண், பாஸிடிவ் - நெகட்டிவ், கீழ் - மேல், என எப்போதும் இருநிலை தன்மையை மட்டுமே கற்பிக்கும் இந்த சமூகம், அதனை தாண்டி நம்மை சிந்திக்க விடுவதில்லை. அதன் வெளிப்பாடு தான் நாம் இதுவரை இருநிலை மனநிலையை தாண்டி சிந்திப்பதில்லை. இந்த சமூக கட்டமைப்பு பல மட்டங்களை கொண்டது. அதில் பாலின மட்டமானது ஆண் - பெண் எனும் இருநிலை தன்மையிலிருந்து துளியும் மாறவில்லை.

அதன் விளைவுகளை தனது ஆய்வு மூலமாக மிகச்சிறப்பாக விளக்கி கூறினார்கள் பிருந்தாலக்ட்மி அவர்கள். பாலின ஆய்வாளரான பிருந்தா அவர்கள் கனடாவில் உள்ள சர்வதேச வளர்ச்சிக்கான ஆய்வு மையத்துடன் இணைந்து பாலின இருமைநிலைக்கு ஆப்பால் எனும் ஆய்வை சமர்பித்துள்ளார்கள். அவர்களது ஆய்வின் போது கேட்டுணர்ந்த மாற்று பாலினத்தவரின் வாழ்க்கை சவால்களை பதிவு செய்த போது நம்மை ஒரு பதற்றம் தொற்றிக்கொள்ளாமல் இல்லை. பல நேரங்களை நமது செய்கையும், கொள்கைகளும் நம்மை அறியாமலேயே இருமைநிலையே ஏற்றுக்கொள்கிறது. ஒரு தனிநபர் இருமைநிலையை மட்டுமே கொள்கை என கொண்டிருப்பாரானால் அவரை பல வகைகளில் திருத்திவிடமுடியும். ஆனால் ஒரு அரசே அந்த நிலைப்பாட்டை எடுக்கும் பட்சத்தில் இன்னும் மோசமான விளைவுகளே ஏற்ப்படுகின்றன.

அவற்றின் விளைவாக தான் மூன்றாம் பாலினத்தவரை குறித்த தவறான ஆய்வுகணக்கீடுகளை மேற்கொள்வது, அவர்களது வாழ்வியல் சூழல்களை உணராமல் அவர்களது வாழ்வாதரத்தை மூடிமறைப்பது, சலுகைகள் முதல் உதவிதொகைகள் வரை அனைத்திலும் முற்றும் போலியான தகவல்களை கட்டமைத்து தங்களது கடமைகளை முடித்துகொள்கிறது அரசும் அதன் அங்கங்களும் என ஒரு வலுவான ஆதாரத்துடனான ஆய்வை தெளிவாக விளக்கி கூறினார்கள் பிருந்தா அவர்கள்.

இனிமேலாவது நாம் மேற்கொள்ளும் ஆய்வாக / கணக்கெடுப்பாக இருக்கட்டும் அல்லது அரசு மேற்கொள்ளும் ஆய்வாக / கணக்கெடுப்பாக இருக்கட்டும், அவை முறையாக கட்டமைக்கப்பட்ட, பாகுபாடுகளற்ற, சமத்துவமானவைகளாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்திட முற்படுவோம்.

நன்றி !

Tags