Democrazily_Science - Theni Workhop

Democrazily Science Nov 12, 2019

டெமோகிரேஸிலி சயின்ஸ் - Democrazily Science ”தென்மேற்கு பருவக்காத்து தேனி பக்கம் வீசும் போது சாரல்.. மழைச் சாரல்..” இந்த பாடல் வரிகள் போதும் தேனி மாவட்டத்தின் இயற்கை அழகை பேசட, இந்த தேனி மண்ணில் தான் நமது முதல் ”டெமோகிரேஸிலி சயின்ஸ் - Democrazily Science” எனும் அறிவியல் பொழுதாக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நிகழ்ச்சி என்றவுடன் எங்களுக்கும் மிகுந்த ஆர்வம். மாணவர்களை பிரமிக்க செய்யும் வகையில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திட வேண்டும் என திட்டமிட்டோம். அதற்காக பல நண்பர்களையும், ஆர்வளர்களையும் இணைத்துக்கொண்டோம்.

Democrazily_Science

நிகழ்ச்சியின் சிறப்பை விவரிப்பதற்கு முன் Democrazily Scienceன் அடிப்படை குறிக்கோளை பார்த்துவிடலாம். நாம் அனைவருக்கும் ஏதாவது ஒருவகையில் பொழுது போக்கு என்ற அம்சம் இருக்கும். அந்த வகையில் சிலருக்கு செய்திதாள்களை படிப்பது, சிலருக்கு திரைப்படங்களை பார்ப்பது, சிலருக்கு பாடல்களை கேட்ப்பது என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கலாம். ஆனால் இவற்றில் பொழுதை ஆக்க்கபூர்வத்திற்கு பயன்படுத்த நம்மை தூண்டும் பொழுதுபோக்குகள் உள்ளனவா? இந்த கேள்வி தான் Democrazily Science நிகழ்ச்சிக்கான அடிப்படை. ஆகவே நமது நாட்டின் நாளைய தூண்களான மாணவர்களை பொழுதை ஆக்கபூர்வமாக அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த உதவும் விதமான பொழுதுபோக்குகளை (Hobbies), அதிலும் குறிப்பாக அறிவியல் மனப்பான்மையை வளர்த்துகொள்ளும் விதமான   Hobbies-ஐ அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கம். நகர்புறங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கூட பல நேரங்களில் இதுமாதிரியான ஆக்கபூர்வ பொழுதுபோக்குகள் எளிமையாக அறிமுகமாகிவிடுகின்றன. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இந்த அறிமுகங்களை கிடைப்பதில்லை என்பது தான் பிரச்சனை. அதற்கான தீர்வாக தான் இந்த Democrazily Science நிகழ்ச்சி.

Democrazily_Science

சரி வாங்க, இப்போ தேனி மாவட்டத்துக்குள்ள போகலாம். நாம் தேர்ந்தெடுத்துள்ள பள்ளி தேனி மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள ஒரு சிறிய மலை கிராமமான “லோயர் கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளி”. இங்கு சுமார் 600 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக சுற்றியுள்ள சில குக்கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் கல்விபெற இந்த பள்ளியை தான் நம்பியுள்ளனர். பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலித் தொழிலாளிகள். நான் பயின்றதும் இந்த அரசுபள்ளியில் தான். என்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய ஆயத்த வேலைகளை செய்ததும் இந்த பள்ளி தான். இந்த மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளை உருவாக்கிட திட்டமிட்டோம். அதன்படி “ஹேம் அமச்சூர் ரேடியோ (HAM Amateur Radio) மூலமாக இயற்கை பேரிடர் அவசர நேரங்களில் எப்படி தொலைதொடர்பை ஏற்படுத்துவது, தொலைநோக்கி மூலமாக இரவு வானத்தை ஆய்வு செய்தல் (Telescope) மற்றும் எளிய மின்னியல் கருவிகளை கொண்டு விண்வெளிதொழில்நுட்பங்களை பயில்வது மற்றும் ரோபோடிக்ஸை பயில்வது (Basic Electronics with Space Technologies & Robotics)” போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கூடலூர் ரோட்டரி சங்கமும், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பக்கத்து கிராமங்களிலிருந்து, நகரங்களிலிருந்து கூட மாணவர்கள் வந்திருந்தனர். மொத்தமாக 825 மாணவ மாணவிகள் இந்த நிக்ழ்ச்சியில் பங்கெடுத்தனர். நிச்சயமான அதில் ஒருவராவது ஏதேனும் ஒரு பொழுது பொக்கை பின்பற்றுவார் என்ற  நம்பிக்கையுடன் விடைபெற முடியாமல் விடைபெற்றோம்.

அன்புடன் சுரேந்தர் பொன்னழகர்

Tags