Gender Talks in Tamil - 14: Examining Tamil Cinema: Feminist film tests and Movies that pass, flair, or reimagine them

gendertalks Jan 18, 2021

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி இன்று பலரின் வாழ்க்கையின் அங்கங்களாக மாறி விட்டன. அதிலும் சின்னதிரை சீரியல்களின் அலப்பரைகள் தாங்க முடியாத அளவிற்கு சென்று கொண்டிருக்கின்றன.

ஒரு சினிமாவை எப்படி பார்க்க வேண்டும்? அதனை எப்படி மதிப்பிட வேண்டும்? நம் நண்பர்களோடு விவாதிக்கும் போது அதனை எப்படி பகிரிந்துகொள்ள வேண்டும்? இதற்கெல்லாம் நமக்கு வரையறைகளே இல்லை. பொத்தாம் பொதுவாக ”மச்சி படம் செம!” இல்லையெனில் படம் ”செம பிளாப் மச்சி !” என கடந்து விடுகிறோம்.

பொதுவாகவே சினிமா எடுப்பதை ஒருவித ”கலை” என்று தான் வகைபடுத்தி வருகிறோம். அப்படியெனில் கலைகளை ரசிப்பதற்கும் ஒரு ரசனை வேண்டுமல்லவா? உதாரணத்திற்கு ஒரு சினிமாவில் வெறும் கொலை காட்சிகள் மட்டுமே படம் முழுக்க வருகிறது என்று வைத்துகொள்வோம். அந்த சினிமாவை ரசிக்க முடியுமா? பெரும்பாலும் இல்லை.  அப்படி ரசனைக்கும் ஒரு வரயறை உண்டல்லவா. அந்த ரசனையை தூண்டும் சினிமாவிற்கும் ஒரு பொறுப்புணர்வு வேண்டுமல்லவா?

ஆனால் இன்றைய சினிமாக்கள் அந்த பொறுப்புணர்வுகளை எல்லாம் மறந்து சமூக கால்புணர்சிகளையும், சமூக வெறுப்புகளையும், அடிமைத்தனத்தை தண்ணீர் ஊற்றி வளர்க்கும் விதத்திலும் தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சினிமாக்கள் தனது வரட்டுத் தனமான மசாலா கலந்த காமகொடூரங்களை காண்பித்தும், காதலை காண்பிக்கிறேன் எனும் விதத்தில் பெண்ணடிமை தனத்தை வேரூன்றச் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளன.

இப்படிப்பட்ட சினிமாக்களை நாம் எப்படி மதிப்பிடுவது, மதிப்பிடும் போது கவனிக்க வேண்டியவை எவை? இது போன்ற பல அருமையான கருத்துகளை தனது அனுபவத்தின் வெளிப்பாடாக பகிர்ந்துகொண்டார்கள் அர்ச்சனா அவர்கள்.

பாலியல், பாலினம், பாலீர்ப்பு குறித்து பேசுவோம் நிகழ்ச்சியின் 14வது வார நிகழ்ச்சியில் கருத்துரை கீழே இணைக்கப்பட்டுள்ளது. அவசியம் அனைவரும் கேட்டு பயன்பெறவும்.

நன்றி !!

என்

Tags