Exoplanets - புறக்கோள்கள்
வான் அறிவியல் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆர்வம் தொத்திக்கொள்ளும். அந்த ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தும் முயற்சிதான் தமிழில் வானியல் திட்டம். வாருங்கள் விண்வெளிக்குள் ஒரு பயணம் போகலாம்...
இன்று நாம் புறக்கோள்கள் பற்றி அறியலாம். நாம் அனைவரும் விண்வெளியில் எந்த குடும்பத்தில் இருக்கிறோம் என்றால் அனைவரும் கோரஷாக சூரியகுடும்பம் என பதில் கூறுவோம். ஏன் நாம் சூரிய குடும்பம் என அழைக்க வேண்டும். அதாவது, சூரியன் எனும் விண்மீனை மையமாக கொண்டு பூமி உட்பட புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்களும் மற்றும் பிற குறுங்கோள்களும் சுற்றிவருகின்றன. இந்த ஒட்டு மொத்த அமைப்பு முறையை நாம் "சூரிய குடும்பம் - Solar System" என அழைக்கிறோம்.
சரி, நமது சூரியகுடும்பம் போன்று வேறு ஏதாவது விண்மீன் குடும்பங்கள் உள்ளனவா? ஆம், நமது சூரிய குடும்பத்தை போன்றே விண்வெளியில் பல விண்மீன் குடும்பங்கள் உள்ளன. அவை அனைத்தும் அவற்றின் விண்மீனின் பெயரினால் அழைக்கப்படுகின்றது. சில விண்மீன் குடும்பங்கள் ஒரே ஒரு கோளுடனும் (Planet), சில குடும்பங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கோள்களுடனும், இன்னும் சில விண்மீன் குடும்பங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்மீன்களுடனும் உள்ளன. இவற்றை பற்றி இன்னும் விரிவாக அடுத்தடுத்து நாம் பார்க்கலாம்.
தற்போது நமது தலைவர் "புறக்கோள்களுக்கு (Exoplanets)"வரலாம். அதாவது நமது சூரியகுடும்பத்தை சாராத மற்ற விண்மீன் கூட்டங்களை சார்ந்த கோள்கள் அனைத்தும் புறக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
முதன் முதலாக 1992 ம் ஆண்டு முதல் புறக்கோள் பதிவு செய்யப்பட்டது. தற்போது, 1 அக்டோபர் 2019 ன் நிலவரப்படி இதுவரை 4,118 புறக்கோள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சரி நாம் ஏன் இந்த புறக்கோள்களை பற்றி ஆராய வேண்டும். நம் நாட்டில் இது போன்ற ஆய்வுகள் நடக்கின்றனவா? நாம் எப்படி இந்த ஆய்வுகளில் பங்கெடுப்பது என விரிவாக அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..