Gender Talks in Tamil - 08: Gender & Poverty | பாலினமும் வறுமையும்

gendertalks Dec 13, 2020

வறுமை என்றதும் நமது கண்களுக்குள் விரிவது பெருளாதார வறுமை மட்டும் தான். ஆனால் பொருளாதரத்தையும் தாண்டி பலவிதமான வறுமைகள் உள்ளன, அதிலும் பாலின அடிப்படையிலான வறுமைகளுக்கு எல்லையே இல்லை என்பதனை தனது தெளிவான பதிவின் மூலமாக விளக்கினார்கள் ஆய்வாளர் ரஞ்சனி.

பாலினம் குறித்த ஆய்வாளராகவும், ஆலோசகராகவும் அறியப்படும் ரஞ்சனி அவர்கள் எவ்வாறு நீடித்த நிலையான வளர்ச்சியை அடைய பாலின ரீதியிலான வறுமையை ஒழிப்பது அவசியம் என்பதை தகுந்த தரவுகளோடு முன்வைத்த விதம் அருமையாக அமைந்தது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் - 2030 ன் கீழ் வரும் பாலின சமத்துவத்தை அடைவதற்கு நாம் பொருளாதார வறுமையோடு சேர்த்து எவ்வாறு உரிமைகளுக்கான வறுமைகளையும் ஒழித்திட வேண்டும் என விளக்கினார்கள்.

அதனை தொடர்ந்து பல கேள்விகளையும், விளக்கங்களையும் கூறிய ஆய்வாளர் ரஞ்சனி அவர்கள் ஒரு வேலை திட்டத்தையும் முன்வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை வெறுமனே வந்தவர்கள் போனவர்கள் என பார்க்காமல் அவர்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைக்க எத்தனிப்பது அவர்களது பங்கேற்புகளை மேலும் மேலும் வலுப்பெறச் செய்யும். அந்த பணியை சிறப்பாக துவங்கிவைத்த பாராட்டுகள் ஆய்வாளர் ரஞ்சனி அவர்களுக்கே உரித்தானது.

நன்றி !

ஆய்வாளர் ரஞ்சனி அவர்களின் உரை பதிவு செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்திக்கொள்ளவும்.

Tags