Gender Talks in Tamil - 07: பாலினமும் மதங்களும் | Gender & Religion

gendertalks Dec 13, 2020

மதங்களுக்கும் பாலினத்திற்கும் எப்போதுமே மோதல்களும், இணக்கமான போக்குகளும் இருந்துதான் வருகின்றன. அந்தவகையில் இந்த நிகழ்சியானது மதங்கள் எவ்வாறு பாலின சமத்துவத்தை நிராகரித்தன என்பதை திரு.தாமரைக்கண்ணன் அவர்கள் அருமையாக விளக்கினார்கள்.

குறிப்பாக சாதிய ரீதியிலான பாகுபாடுகளும், பெரும்பான்மை வாதங்கள் எவ்வாறு மற்ற சிறுமான்மையினரின் செயல்பாடுகளிலும் தாக்கங்களை செலுத்துகிறது என்பதை விளக்கியவிதம் அருமை. சிலருடைய கேள்விகள், ஏன் பெரும்பாலும் “இந்து மத நம்பிக்கைகளையே தாக்குவதாக இருக்கிறது? என்றதற்கு தாமரைக்கண்ணன் அவர்களின் பதில் பகுத்தறிவின் பூர்வமாக அமைந்தது. அவருடைய பதிலானது, “நமது நாட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் இந்து மதத்தையும் அதன் சாஸ்திர சம்பிரதாயங்களையும் பின்பற்றுகிறார்கள். அவ்வாறு அவர்கள் பின்பற்றும் நடைமுறையானது மற்ற பல மதங்களின் நடைமுறை செயல்பாடுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. தாலி கட்டிக்கொள்ளும் பழக்கம் முதல், மெட்டி மாட்டிக்கொள்ளும் பழக்கம் வரை பலவற்றையும் நாம் கூறலாம். அதாவது இங்கு நிலவும் பெரும்பான்மை மத சடங்குகளும், சம்பிரதாயங்களும் சிறுபான்மை மதங்களின் தன்மையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் அவர் கூறியதாவது “அதேவேலையில் பெரும்பான்மை நிலையில் உள்ள மதங்களில் இருக்கும் சமத்துவமற்ற தன்மையானது சிறுபான்மை மதங்களுக்கும் தாவுகிறது. அதற்காக இந்து மதம் தவிர்த்த மற்ற மதங்களில் பாலின சமத்துவம் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. அனைத்து மதங்களிலுமே சமத்துவமற்ற தன்மை என்பது இருக்கதான செய்கிறது” என தனது பதிவை அருமையாக முன்வைத்தார்கள்.

தொடர்ந்து எவ்வாறு பல தலைவர்கள் தங்களது மற்றும் தங்களது மதங்களுக்கு அப்பார்பட்ட மதங்களில் இருந்த சமத்துவமற்ற பாலின அடிமைதனங்களை எதிர்த்தார்கள், அவர்களது போராட்டம் எவ்வகை மாற்றங்களை முன்மொழிந்தன என்பனவற்றையும் விளக்கினார்கள்.

நன்றி !

பேச்சாளரின் உரை பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திகொள்ளவும்.

Tags