Gender Talks in Tamil - 10: Gender & Sexuality in India - Historic & Literary Perspective

gendertalks Dec 27, 2020

இந்தியாவில் பாலினம் மற்றும் பால்-ஈர்ப்பு குறித்த வரலாற்று ரீதியான மற்றும் இலக்கிய ரீதியிலான கலந்துரையாடல் இதுவரை நாம் பார்த்திராத, கேள்விப்பட்டிராத ரீதியில் இலங்கியங்களையும், கவிதைகளையும், காப்பியங்களையும், வரலாற்றையும் அருமையாக விளக்கிகூறினார்கள் சிவப்பிரியா கனபதி அவர்கள்.

ஒரு ஆய்வு மாணக்கருக்கே உரிய பதத்தில் அவர் இதுவரை செய்த ஆய்வுகளின் அனுபவங்களை, தான் படித்து ரசித்த கவிதைகளை பாலின கண்ணோட்டோடம் கொண்டு பார்த்து விளக்கிய விதம் சிறப்பானதாக அமைந்தது.

வரலாற்றுரீதியாக எப்படி பால்-ஈர்ப்பு என்பது கட்டுபடுத்தப்பட்ட, சடங்குத்தனமான திருமணமுறைகளால் கொலை செய்யப்பட்டது என்பதையும், இலக்கியங்களில் இன்னும் நிறைந்திருக்கும் பால்-ஈர்ப்பு சார்ந்த கவிதைகளையும், மதங்களின் செயற்கையான கட்டுபாடுகளையும் தாண்டி இன்றுவரை நீடித்து நிலைத்திருக்கும் காதல் கதைகளும் எண்ணிலடங்காதவை போலும். பேச்சாளரின் பேச்சை கேட்டுகொண்டிருக்கும் போதே அவசியம் நாம் இந்த புத்தகங்களை வாசித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் உதிக்கும்.

சுமார் 90 நிமிடங்கள் எவ்வித இடைவெளியும் இன்று அருமையாக பேசிமுடித்தார்கள் சிவப்பிரியா அவர்கள். கடைசிவரையும் யாரும் நிகழ்ச்சி தளத்தைவிட்டு வெளியே போகவும் இல்லை.

அருமையாக அமைந்த நிகழ்ச்சி. நிச்சயம் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கும் வாசிக்க தோன்றும்.. கருத்துகள் இருப்பின் தெரியப்படுத்தவும். பதிவு செய்யப்பட்ட கானொலி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி !

Tags