Gender Talks in Tamil – Over view | பாலியல் பேசுவோம் - ஓர் பார்வை

gendertalks Nov 12, 2020

Gender Talks in Tamil – Over view | பாலியல் பேசுவோம் - ஓர் பார்வை

கடந்த 4 வாரங்களாக பாலியல் பேசுவோம்  (Gender Talks in Tamil) நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சிகளை சுருக்கமாக விளக்கும் விதமாக இந்த வலைப்பூ பதிவிடப்படுகிறது.

முதல் நிகழ்ச்சியாக (17 அக்டோபர் 2020) பாலினத்தை சமூகமயப்படுத்துதல் (Gender Socialization) எனும் தலைப்பில் பேராசிரியர் மணிமேகலை, மகளிரியல் துறை தலைவர், பாரதிதாசன் பல்கலைகழகம் உரையாற்றினார்கள். பால் (Sex) என்றால் என்ன? பாலினம் (Gender) என்றால் என்ன? என்பதை தெளிவான உதாரணங்களுடன் விளக்கினார்கள். எவ்வாறு பாலினம் என்பது சமூகமயப்படுத்த வேண்டும்? என்ற பல கேள்விகளை முன்வைத்து அதற்கான பதிலை தெளிவாக விளக்கினார்கள். குறிப்பாக சமூக கட்டமைப்பை மாற்றியமைப்பதன் தேவை, எப்படிப்பட்ட சமூக கட்டமைப்பை நாம் கட்டியமைக்க வேண்டியுள்ளது என்பதனையும் அவரது உரையில் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

Gender Talks in Tamil Promotion poster [Topic #1: Gender Socialization]

                          இரண்டாவது நிகழ்ச்சி 24 அக்டோபர் 2020 அன்று பேராசிரியர் சுபா அவர்களால் நிறைவேறியது. இன்றைய சமூக கலாச்சாரத்தில் எவ்வாறு பாலினம் பார்க்கப்படுகிறது என்ற பரந்துபட்ட பார்வையை முன்வைத்தார்கள். குறிப்பாக சாதிய, மத ரீதியாகவும் பாலினம் என்பது எவ்வாறு கட்டமைக்கப்பட்டு சுரண்டலுக்கு வழிவகுக்கிறது என்பதனையும் விளக்கினார்கள். சாஸ்திர சம்பிரதாயங்கள் என்பவை எவ்வளவு கொடூரமாக பாலின சமத்துவத்தை மறுக்கின்றன என்பது மிகவும் அவசியமான, அத்யாவசியமான வாதமாக விளங்கியது. அதன் தொடர்ச்சியாக எவ்வாறு நவீன கலைகளும் பாலின சமத்துவத்தை சீரழித்துவருகின்றன என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்கள்.

Gender Talks in Tamil Promotion poster [Topic #2: Gender & Culture]

                          மூன்றாவது வாரம் (01 நவம்பர் 2020) ஒரு விவாதமாக நிகழ்ச்சி கட்டமைக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக பேசப்பட்டவற்றை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ளும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இந்த நிகழ்ச்சி சமூக ஆர்வலர் டெல்பினா, நிறங்கள் தொண்டு நிறுவனம் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. பால் (Sex), பாலினம் (Gender) குறித்த புரிதலை ஏற்ப்படுத்த இணையவழி தளத்திலும் செயல்பாடுகளை கொடுத்து அருமையாக ஒருங்கிணைத்திருந்தார். குறிப்பாக ஆண், பெண் குறித்த பொதுபுரிதலை உடைத்தெரிய அவர் முன்னெடுத்தவிதம் அருமையாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக மாறிய பாலினத்தவர்களை குறித்த ஒரு அனுபவபகிர்வு கலந்துகொண்ட அனைவரையும் சென்றடைந்தது எனலாம். அந்த அனுபவ பகிர்வுக்கு பின்பு பலரும் தங்களது மனதில் தோன்றிய அல்லது தாங்கள் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இந்த நிக்ழ்ச்சியானது நிறைவான விவாதமாக இருந்தது. அவசியம் நீங்களும் பாருங்கள்.

Gender Talks in Tamil Promotion poster [Topic #3: Discussion on Gender & Sex]

               

                      நான்காவது வார (08 நவம்பர் 2020) நிகழ்ச்சி பாலின சமத்துவம் குறித்தாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை பேராசிரியர் முருகேஸ்வரி அவர்கள் வழிநடத்தினார்கள். நமது சமூக அரங்கில் எவ்வாறு பாலின சமத்துவத்தை கொண்டுவர முடியும் என்பதை சில செயல்திட்டங்களை முன்வைத்து விளக்கினார்கள். மேலும் எவ்வாறு பெண்கள், மாற்று பாலினத்தவர்கள் தங்களது சமத்துவத்தை அடைய முற்ப்பட வேண்டும் என்பதையும் விளக்கியது தனித்துவமாக அமைந்தது.

Gender Talks in Tamil Promotion poster [Topic #4: Gender Equality]

Tags