பாலினம் பேசுவோம் - 16: ஆண்களும் பெண்களும் எப்படி உருவாக்கப் படுகிறார்கள்?

gendertalks Feb 1, 2021

இந்த சமூகத்தில் நாம் உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறோம். குழந்தை பிறக்கும் போது வடிவமைக்கப்படாத உயிராகத்தான் இருக்கிறது. நாட்கள் நகரும் வேகத்தில் அந்த குழந்தையை நாம் வடிவமைக்கும் விதம் வேகமெடுக்க ஆரம்பிக்கிறது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி வடிவமைப்பின் வேகம் எங்கும் குறைவதில்லை.

ஒரு ஆண் குழந்தையை சொகுசாகவும், சௌகர்யமாகவும் வடிவமைக்கும் குடும்பங்களும் சமூகங்களும் பெண்குழந்தைகளை ஆரம்பத்திலிருந்தே அடிமைகளாக்கும் வடிவமைப்பு பணியில் ஈடுபட துவங்குகின்றன.

இப்படியாக உடையிலிருந்து, உணவு வரை எங்கும் குழந்தைகள் வடிவமைக்கப்படுகிறார்கள். இன்றைய நவீன பெண்களும் கூட தனது உடையமைப்பின் உரிமையை சுதந்திரம் என கருதுகிறார்கள். ஆனால் இந்த முதலாளித்துவ சமூகம் எப்படி பெண்களின் அடிமைத்தனத்தை சுதந்திரம் என நம்பவைத்திருக்கிறது. இப்படி தான் பிறந்ததிலிருந்தே குழந்தைகள் வடிவமைப்புக்குள்ளாக்கப்பட்டு சீரளிக்கப்படுகிறார்கள்.

இப்படியாக பல கருத்துகளை அனுபவ பகிர்வுகளை மா என்ற பத்மாவதி அம்மா அவர்கள் பகிர்ந்துகொண்டது அனைவரையும் சிந்திக்க தூண்டியது.

நீங்களும் சிந்திக்க துவங்குங்கள்.. கீழே நிகழ்சியின் பதிவுசெய்யப்பட்ட கானொலி இணைக்கப்பட்டுள்ளது. அவசியம் கேட்டு பயன்பெறவும் !

நன்றி !

Poster of the Programme 

Tags