VISTA - A NEW HORIZON

Oct 31, 2019

மகிழ்ச்சி என்பது, நாம் செய்யும் வேலைக்கு தக்க சன்மானம் கிடைக்கும் போது வரும். அந்த வகையில் எங்களது பல முயற்சிகளில் ஒரு முயற்சியாக "இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு - ISRO" கிராமப்புற மாணவர்களை அழைத்துச் சென்று வருகிறோம். அதையொட்டி கடந்த ஆண்டு (2018) சர்வதேச விண்வெளி வார விழாவை கொண்டாடும் விதமாக விண்வெளி வார விழா போட்டிகள் பல கிராமப்புற அரசுபள்ளிகளில் நடைபெற்றது. அந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 10 மாணவர்களை தேர்வு செய்து கேரள மாநிலம் தும்பாவில் உள்ள இந்தியாவின் முதல் இராக்கெட் ஏவுதளமான தும்பா ராக்கெட் ஏவுதளத்திற்கு அழைத்துச் சென்றோம். அன்று வளிமண்டல ஆய்வுக்காக இராகெட் ஒன்றும் ஏவப்பட்டது.

VISTA

இது ஒரு சிறிய முயற்சி தான். ஆனால் அந்த 10 மாணவர்களை பல நாழிதழ்கள் உலகிற்கு அறிமுகம் செய்தன. எங்களது எதிர்பார்ப்பும் அது தான். அடையாளமும், அறிமுகமும் அற்ற கிறாமப்புற மாணவர்களை அங்கீகரிக்க வேண்டும். அப்படி அறிமுகமான ஒரு மாணவனின் வாழ்க்கையில் புதிய பாதையை அமைத்து கொடுத்துள்ளது ISRO நிகழ்ச்சி.

Messer Cutting System Pvt. Ltd எனும் நிறுவனம் தனது சமூக பங்களிப்பு நிதியிலிருந்து மாணவன் "தேவகுரு" (ISRO சென்று வந்த 10 மாணவர்களில் ஒருவர்) அவர்களுக்கு மாதம் 2000 ரூபயை உதவித்தொகையாக வழங்கிடவும், பள்ளிகூட கட்டிடங்களை சரிபார்த்து தரவும் என 25 இலட்சம் நிதியை ஒதுக்கியுள்ளனர். மாணவர் தேவகுருவின் தந்தை உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வரும் சூழலில் இந்த உதவி அந்த மாணவனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

VISTA

இதை காட்டிலும் என்ன மகிழ்ச்சி வேண்டும் எங்களுக்கு. இது போன்ற அங்கீகாரங்களையும், அடையாளம் காணுதலையும் தான் நாங்களும் எதிர்பார்த்தோம். எங்களது பெருவாரியான முயற்சிகளின் அடிநாதமும் இது தான். திறமையான பல மாணவர்கள் இன்றும் நமது கிராமப்பகுதிகளில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை முறையாக கண்டுபிடிக்க முடியாமலும், வழிகாட்ட முடியாமலும் சீரழிந்து விடுகின்றனர்.

ஒரு சிறு குழுவாக எங்களது இந்த முயற்ச்சி 10 மாணவர்களை  கண்டுபிடித்தது. அதில் ஒரு மாணவருக்கு உயர்கல்வி வரை எவ்வித கவலையும் இன்றி உதவித்தொகையுடன் படிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது.

தேவகுருவை போல இன்னும் நாம்‌ கண்டுபிடிக்க வேண்டிய பலர் இருக்கின்றனர்.

அவர்களை தேடிச்செல்லும் முயற்சி தான் "Open Science Centre". நாங்கள் தேடிச் செல்கிறோம். வாருங்கள் நீங்களும் இன்னும் பல அப்துல் கலாம்களை கண்டுபிடிக்க..

இணைப்பு: மேலே குறிப்பிட்ட தகவலை உறுதி செய்து பள்ளி தலைமைஆசிரியர் வழங்கிய நன்றி கடிதம்.

விரிவாக தெரிந்துகொள்ள http://openspacefoundation.in openspace.hq@gmail.com +918754778345