International Asteroid Search Campaign - சர்வதேச அளவிலான விண்கற்களை கண்டறியும் முனைப்பியக்கம்
விண்கற்களை கண்டறியும் முனைப்பியக்கத்திற்கான சர்வசேத கூட்டமைப்பு ஆண்டு முழுவதும் பல கட்டங்களாக விண்கற்கள் கண்டறியும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் மும்பையில் உள்ள மார்ஸ் இந்தியா நோக்குகூடத்தின் சார்பாக பங்குபெற்று அனுபவபட்ட எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக Space Generation Advisory Council (SGAC) -ன் விண்கற்கள் கண்டறியும் முனைப்பியக்கத்தில் பங்குபெற தேர்வு செய்யப்பட்டோம்.
இது நாங்கள் பங்கேற்கும் 2-வது விண்கற்கள் கண்டறியும் முனைப்பியக்கம் ஆகும். முந்தைய நிகழ்ச்சியில் நாங்கள் கண்டறிந்த 11 வான் நகரும் பொருட்கள் முதல்நிலை ஆய்விற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதே உத்வேகத்தோடு இந்த முறையும் களமிறங்கினோம். இந்த முறை 3 மட்டும் தான் கண்டறிய முடிந்தது.
ஆனாலும் ஆர்வம் குறையவில்லை. இந்த முறை பல நிறைய அறிவியல் தகவல்கலை கண்டறிய முடிந்தது. கற்றுகொள்ல முடிந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உதவியாக இருந்த Space Generation Advisory Council (SGAC) -ன் விண்கற்கள் கண்டறியும் முனைப்பியக்கத்திற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த முறை நாங்கள் சில கல்லூரி மாணாக்கர்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டோம். அதன்படி 5 மாணவிகல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியிலிருந்து கலந்து கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டு சான்றிதழ்கலையும் பெற்றுள்ளன்ர்.
உங்களுக்கு இது போன்ற பெருந்திரள் அறிவியல் ஆய்வுகளில் பங்கேற்க ஆர்வமிருந்தால் தொடர்புகொள்ளவும்.
Open Space Foundation | +91 8754778345 | contact@openspacefoundation.in
நன்றி !