MarsG India Asteroid Search Campaign - 11 September - 06 October 2020
விண்கற்களை ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆவல் எங்களை பல ஆண்டுகளாகவே சுற்றி சுற்றி வருகிறது. அதற்கு தீனி போடும் வகையில் எங்களுக்கு வாய்ப்பும் கிடைத்தது. மும்பையை மையமாக வைத்து செயல்படும் ஒரு மக்கள் அறிவியல் ஆய்வு குழுவான MarsG India Observatory-ன் ஒருங்கிணைப்பாளர் திரு.சுகுமார் அவர்கள் ஒரு அழைப்பு விடுத்தார்கள்.
முதலில் எங்களுக்குள் ஒரு தயக்கம் இருந்தது. இதுவரை விண்கற்களை குறித்து பேசி தான் வந்துள்ளோமே தவிர அவற்றை ஆய்வு செய்ததில்லை. சற்று ஆலோசித்து முடிவு செய்தோம். எதுவாக இருந்தாலும் முட்டி மோதி பார்த்துவிட வேண்டியது தான என தீர்மானித்தோம். முதலில் கண்ணை கட்டிவிட்டது போல இருந்தாலும் முறையான பயிற்சி மூலமாக பலவற்றை கற்றுக்கொண்டோம்.
MarsG India Observatory - மூலமாக வழங்கப்பட்ட Asterometrica பயிற்சியானது முறையாக எவ்வாறு ஒரு நகரும் பொருளை நமக்கு வழங்கப்பட்ட தரவுகளிலிருந்து (Data) பிரிப்பது. அப்படி பிரித்து பார்க்கும் போது அது ஒரு விண்கல்லாக இருக்கலாம் என எப்படி அனுமானிப்பது என்பதை தெளிவாக விளக்கி கூறினார்கள். பயிற்சியின் போதே ஆர்வம் அதிகரிக்கத்துவங்கியது.
அந்த ஆர்வத்தின் வெம்மையை சிந்தாமல் சிதறாமல் பார்த்து பார்த்து வேலை செய்தோம். செப்டம்பர் 11 -ம் தேதி துவங்கிய இந்த நிகழ்சியானது அக்டோபர் 06 தேதி முடிவடைந்தது. இதற்கிடைப்பட்ட நாட்களில் மொத்தம் 21 தரவு தொகுப்புகள் எங்களுக்கு கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்ததில் மொத்தம் 29 நகரும் பொருட்களை கண்டறிந்து அவை விண்கற்களாகவும் இருப்பதற்கு சாத்தியகூறு உள்ளது என அறிக்கைகளை சமர்பித்தோம். அவற்றை முதல் நிலை ஆய்வுக்கு உட்படுத்திய ஹவாய் ஆய்வு மையம் நாங்கள் கண்டறிந்த 11 நகரும் பொருட்கள் விண்கற்களாக இருப்பதற்கு அதிக சாத்தியகூறுகள் இருப்பதை உறுதிசெய்துள்ளது.
வேரென்ன வேண்டும் ஒரு இளம் ஆய்வாளருக்கு, அவர்கள் செய்யும் சின்ன சின்ன முயற்சிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், அதற்கான ஊக்கபடுத்துதலும் தான் வெற்றிக்கான படிக்கட்டுகள். அக்டோபர் மாதம் 06 - ம் தேதி நிகழ்ச்சி இனிமையாக முடிந்தது. அடுத்த மூன்று நாட்களுக்குள் சான்றிதழ்கள் கிடைத்துவிட்டன.
இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்கு வாய்ப்பளித்த MarsG India Observatory -ன் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள்.
நன்றி !
(உங்களுக்கும் இது போன்ற ஆய்வுகளில் பங்கேற்க ஆர்வமிருந்தால் தொடர்புகொள்ளவும்)


