பாலினம் பேசுவோம் - 17: பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்கள்

gendertalks Feb 7, 2021

பாலினம் பேசுவோம் நிகழ்ச்சியின் 17 வது வாரம் இன்று. இந்த வார நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் கமலவேணி, மகளீரியல் துறை, பாரதியார் பல்கலைகழகம், கோவை அவர்கள் கலந்து கொண்டார்கள்.

நாம் பணியாற்றும் இடங்களில் பல்வேறு வகைகளில், பல நிலைகளில் பாலியல் வன்மங்கள் அரங்கேறிவருகின்றன என்பதை பல நடைமுறை உதாரணங்களோடு விளக்கினார்கள். அப்படி நடைபெறும் பாலியல் அத்துமீறல்களை கையாள, எதிர்த்து போராடிட நாம் முனையவில்லையெனில் நாம் மீண்டும் அடிமை நிலைக்கு செல்ல வேண்டியது தான் என்பதை விளக்கினார்கள்.

குறிப்பாக பெண்கள் பணியிடங்களில் சந்திக்கும் சவால்களையும், சட்ட ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகளையும் விவரித்தார்கள்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள கானொலியை காணவும்.

நன்றி

Tags