பாலினம் பேசுவோம் - 18: பெண்களும் அரசியலும் - தலித் பெண்கள் சந்திக்கும் சவால்கள்
அரசியல் உலகளவிலும் சரி, உள்ளூர் அளவிலும் சரி ஆண்களால் நிறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியலில் பங்கெடுக்காமல் உரிமைகளை பற்றி பேச முடியாது எனவும் வாய்கிழிய பேசும் நாடக உலகம் இது. இந்த சூழலில் பொது சமூகத்தால் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கும் தலித் சமூக பெண்கள் அரசியல் அரங்கில் சந்திக்கும் சவால்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள் முனைவர்.கலைச்செல்வி அவர்கள். புதுச்சேரி பல்கலைகழக் முதுநிலை முனைவர் பட்ட ஆய்வாளரான இவர் தனது ஆய்வுகளின் போதும் நடைமுறை வாழ்க்கையின் போது சந்தித்த பல்வேறு அரசியல் நிகழ்வுகளையும், அதில் தலித் பெண்களின் சவால்களையும் விரிவாக விளக்கி கூறினார்கள்.
பெண்களின் அரசியல் பங்கேற்பு என்பது ஆண்கள் ஆட்டுவிக்கும் பொம்மை சாவியை போல தான் உள்ளது, அதிலும் குறிப்பாக தலித் பெண்களின் சவால்கள் மிகவும் கொடுமையானது. முறையாக அரசியலில் பங்கேற்று தேர்தல் மூலமாக வெற்றியும் பெற்று அரசியலில் ஈடுபடும் ஒரு தலித் பெண் தனது அரசியல் அலுவலகத்திலும் தலித்தாகவே நடத்தப்படும் அவலம் இன்றும் பல பஞ்சாயத்துகளில் நடைபெற்றுகொண்டு தான் இருக்கிறது.
இது போன்ற பல அவலங்களை பட்டியலிட்டு பேசினார்கள். அவர்களது முழு உரையையும் கானொலிவடிவில் கேட்டிட கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும்.