Gender Talks in Tamil - 12: Perspective of Women - Past & Present

இப்போதெல்லாம் பெண்கள் முன்னேறிவிட்டார்கள், அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த துவங்கிவிட்டனர், என பேசும் நமக்கு ஏன் பெண்கள் அடிமையானார்கள் என்பது தெரியுமா? நம் நாட்டிலும் சில பெண்கள் எப்படி வீரம் நிறைந்தவர்களாக இருந்தார்கள் தெரியுமா? வீரம் மட்டுமல்லாது தான் பிறந்த நாட்டை மீட்டெடுக்க அஞ்சாது போராடிய வீரபெண்ணின் வரலாற்றை அறிவோமா? இவை அனைத்தையும் விளக்கும் விதத்தில் அமைந்தது இந்த வார நிகழ்ச்சி.
இந்த வார நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சேயோன் எனும் மதன்குமார் அவர்கள் வந்திருந்தார்கள். ஒரு பொறியாளரான சேயோன், தமிழ் மொழியின் மீதும், தமிழ் மண்ணின் மீதும் தீராத காதல் கொண்டமையால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட தமிழ் வரலாறுகளை எடுத்தெழுதுவதில் தீராத ஆர்வம் கொண்டு ஒரு எழுத்தாளராக பரிணமிக்கதுவங்கினார். அவரது முதல் படைப்பான “வேலு நாட்சியார் - பெண்மையின் பேராண்மை” எனும் புத்தகம் தமிழக மண்ணில் பெண்கள் எப்படி பேராண்மை மிக்கவர்களாக இருந்தனர் என்பதை எடுத்தியம்புகிறது.
இப்புத்தகத்திற்காக அவர் செய்த பல ஆய்வுகளின் வெளிப்பாடாக பெண்கள் அடிமையான வரலாற்றையும், அவற்றிலிருந்து நாம் எப்படி வெளியேறுவது என்பது குறித்தும் விளக்கமாக கூறினார்கள்.
அவசியம் நீங்களும் கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் சில கருத்துகள் தோன்றலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி !