Science of Tsunami - சுனாமி ஒரு அறிவியல் பார்வை

Ariviyal Parvai Dec 26, 2020

நம்மை சுற்றி நிறைய உண்மைகள் உண்டு. அவற்றை அறிவியல் கண்கொண்டு பார்க்கும் போது அந்த உண்மையை நம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியும், சில சமயம் ரசிக்கவும் முடியும். அதே உண்மையை நாம் மூடிநம்பிக்கை எனும் கண்ணாடி கொண்டு பார்க்கும் போது நாம் அறிவற்ற மூட பதர்களாகிவிடுகிறோம்.

எங்களது இந்த முயற்சியானது அறிவியலை அறிவியலாக பார்க்கவைப்பது தான். நமது கல்வியும், கல்விமுறையும் இதுவரை அறிவியல் பார்வையை நம்மிடமிருந்து அந்நியமாக்கியே வைத்துவிட்டது. அதற்கான மாற்று முயற்சிதான் இந்த தொடர் கானொலிகள்.

=========================================================

சுனாமி ஓரு அறிவியல் பார்வை -   Science of Tsunami

நமது இந்திய பிராந்தியத்தில் 2004 க்கு முன்பாக சுனாமி என்பது ஏதோ அந்நியச்சொல். ஆனால் டிசம்பர் 26, 2004ம் ஆண்டிற்கு பிறகு அனைத்து பாடபுத்தகங்களும், செய்திதாள்களும் எழுதிதள்ளிய வார்த்தை சுனாமி. அவ்வளவு தூரம் நம்மை சுற்றிக்கொண்ட வார்த்தைக்கு வலிமை எப்போதுமே அதிகம் தான்.

எப்போதும் அலைகளை கடற்கரைகளின் மீது மோதவிட்டு விளையாடும் கடலுக்கு எங்கிருந்து வந்ததோ அவ்வளவு கோவம். பாயும் புலி பதுங்குவது போல சற்று உள்வாங்கிய கடல் திடீரென பேரலையாக, இதுவரை கண்டிராத கடலின் குரூர முகத்தை காட்டியவண்ணம் கடற்கரையில் தாண்டவமாட வந்தது.

கடலில் இப்படியொரு வினோதத்தை இதுவரை பார்த்திராத மக்கள் கடற்கரையே கதியென வேடிக்கை பார்க்கை, கண்ணிமைக்கும் பொழுதில் தனது உக்கிரத்தை முழுவதுமாக தரையிரக்கி வைத்து சென்றது கடல்.

ஆழிப்பேரலை, சங்க இலக்கியங்களில் எங்கோ சுவாசித்த ஞாபகம். அன்று வியந்ததுண்டு தமிழில் இலக்கியங்களில் அறிவியலுக்கும் இடம் உண்டோ என்று! அதற்கு முன்புவரை பக்தி இலக்கியங்கள் மற்றும்  மனப்பாட செயுள்களாக மட்டும் தெரிந்த தமிழ் தன்னை திரித்து காட்டி மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது அந்த சொற்பதத்திற்கு முழுமையான அர்த்தம் புரியவில்லை எனினும் மனனம் செய்துகொண்டேன். அன்று மனப்பாடம் செய்து கொண்ட சொல்லிற்கு விளக்கமளிக்கவோ என்னவோ விரைந்தோடி வந்தது கடல். எனக்கு அது ஆச்சரியம். கடற்கரையே தனது புகழிடமாகவும், உழைப்பிடமாகவும் கொண்ட பல உழைக்கும் மக்களுக்கும் அது ஆழ்ந்த சோகம். ஆம, சுமார் 2 இடட்சத்திற்கும் அதிகமான மக்களை காவு கொண்டது கடல்.

இந்தியப்பெருங்கடலில் தென்கிழக்கே சுமத்ரா தீவிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்ப்பட்ட இரு கடலடி தட்டுகளின் நகர்வானது ஏற்ப்படுத்திய அதிர்வு, அதனால் ஏற்பட்ட கடலடி அழுத்தம் தான் இந்த மாபெரும் பேரலையை உருவாக்கியுள்ளது.

பொதுவாக நமது புவியின் மேற்பரப்பு இருவகை கண்டதிட்டுகளை கொண்டுள்ளது. நிலத்தடி தட்டுகள் (Continental Plates) மற்றும் கடலடி தட்டுகள் (Oceanic Plates). நிலத்தடி தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் போது மிகபிரமாண்டமான மலைகள் எழுகின்றன. நமது இமயமலை கூட அப்படி உருவானது தான். ஆனால் கடலடி தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் போது அவை மிகப்பெரிய கண்ட நகர்வுகளை உருவாக்கவும், புதிய தீவுகளை உருவாக்கவும் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி தருகின்றன.

2004 -ம் ஆண்டு சுனாமியானது கடலடியில் இரு கண்ட திட்டுகள் ஒன்றை மற்றொன்று அழுத்தி நகர்ந்ததான் ஏற்ப்பட்ட விளைவுதான். அந்த மீப்பெரும் அழுத்தம் உருவாக்கிய புவி அதிர்வானது ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டுகளை போல 23,000 அணுகுண்டுகளுக்கு சமம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மேலும் இதுவரை பதிவு செய்யப்பட்ட நில அதிர்வுகளிலேயே மிகபெரிய இரண்டாவது நில அதிர்வாக இந்த அதிர்வு பதிவிடப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் சுமார் 9.2 என பதிவானது இந்த நிலநடுக்கம். இதனால் புவியின் வேகம் கூட சற்று குறைந்ததாக கூட விஞ்ஞானிகள் கூறினார்கள்.

இந்த கோரசம்பவத்தை பார்த்தபின் பல நாடுகளும் தங்களுக்கான சுனாமி முன்னெச்சரிக்கை மையங்களை அமைக்க தலைபட்டனர். 1940 - களில் அமெரிக்க பிராந்தியத்தில் ஏற்பட்ட நில அதிர்வும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியிம் அமெரிக்கர்களை விழிப்படையச் செய்தது. அதானல் அலாஸ்கா மற்றும் பசுபிக் பிராத்தியத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை மையங்களை நிறுவு கண்காணித்து வருகிறது அமெரிக்கா. நமக்கெல்லாம் பட்டால் தானே புத்தி வரும், அதற்கேற்க 2004 - ம் ஆண்டிற்கு பிறகு பல சுனாமி முன்னெச்சரிக்கை மையங்களை கட்டியமைக்க அரசு திட்டமிட்டு செயல்படுத்தியது.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கு இந்த இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை மையமானது கடலடியில் சுனோமீட்டர் எனும் அழுத்தத்தை அலவிடும் கருவியையும், கடல் மேற்பரப்பில் மிதவை அளவியையும் பொருத்தியுள்ளது. கடலடியில் ஏற்படும் இனம்கான முடியாத அழுத்தத்தை இந்த கருவிகள் தரைகட்டுப்பாட்டு கண்காணிப்பு மையத்திற்கு செயற்கைகோள்கள் மூலமாக அனுப்பிவைக்கும். அவற்றை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் நில அதிர்வு, சுனாமி போன்ற முன்னறிவிப்புகளை செய்கிறார்கள்.

இதெல்லாம் அரசின் செயல், நம்மால் என்ன செய்ய முடியும். நாம் தான் விஞ்ஞானி இல்லையே என கடந்து செல்லும் அறிவியல் ஆர்வலரா நீங்கள்? உங்களாலும் இது போன்ற பேரிடர் காலங்களில் உதவி செய்திட முடியும். 2004 ம் ஆண்டு சுனாமியின் போது அந்தமான் கடற்பகுதியை முதலில் சுனாமி தாக்கியது. அந்த தகவலை உடனடியாக இந்திய கடற்கரைக்கு ஒரு ஹாம் வானொலி ஒலிபரப்பாளர் தகவல் அனுப்பினார். இந்த ஹாம் வானொலியானது நமது முதன்மை தொலை தொடர்பு சாதனங்கள் எல்லாம் முடங்கிப்போனாலும் கூட வேலை செய்யும் ஒரு எளிமையான தொலைதொடர்பு சாதனம் ஆகும். 12 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த தொலைதொடர்பு சாதனத்தை பயன்படுத்த முடியும். தேவையான அனுமதியை பெற இந்திய அரசால் நடத்தப்படும் ஒரு தேர்வில் வெற்றி பெற வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் மூலம் நம்மாலும் பல நேரங்களில் உதவிகரம் நீட்டிட முடியும்.

இப்படி சுனாமி என்பது ஒரு அறிவியல் நிகழ்வே. இது என்னெவோ இயற்கை மனிதர்கலை பழிவாங்க செய்த செயல் என்றோ, கடவுள் கொடுத்த தண்டனை என்றோ, யாரோ செய்த பில்லி சூனிய வேலை என்றோ கருதுவதும், அதற்கான பூஜை, வேண்டுதல்களை செய்வதோ அறிவற்ற பதர்களாக நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் செயல்.

அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் போது தான் நாம் மூட நம்பிக்கைகலை விட்டு வெளியே வர முடியும்.

மீண்டும் ஒரு அருமையான அறிவியல் பார்வையோடு உங்களை சந்திக்கிறோம்.

நன்றி !

Tags