Online workshop on Space Communication & its Practical perspective
செயற்கைகோள்களை குறித்த மனித அறிவு வளர்ந்து வளர்ந்து தற்போது பூமியை விட்டு வேறு கிரகத்தில் குடியேறுவது வரை சென்றுவிட்டது அறிவியல் தொழில்நுட்பம். இப்படிப்பட்ட அறிவியல் தொழில்நுட்பங்களை குறித்த அடிப்படைகளை நாம் அறிந்துகொள்வது என்பது இன்றியமையாததாகிறது. குறிப்பாக பள்ளிகூடங்களிலேயே வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களை குறித்த தகவல்களை மாணாக்கர்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது.
அதன்படி பள்ளி மாணாக்கர்களுக்கு செயற்கைகோள்களையும் அவற்றை எப்படி கண்காணிப்பது என்பது குறித்தும் ஒரு அறிமுக வகுப்பு எடுக்க திட்டமிட்டோம். அதற்கான சிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் இயங்கிவரும் உபகிரகா வானொலி நிலையத்தின் இயக்குநர் திருமிகு.சுப்பிரமணி அவர்களை அழைத்திருந்தோம்.
இரண்டு நாட்கள் இணையவழியாக திட்டமிடப்பட்டது நிகழ்ச்சி. நிகழ்ச்சியானது ஆங்கிலத்தில் நடத்திட திட்டமிடப்பட்டு சுமார் 30 மாணாக்கர்கள் அழைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்து மாணாக்கர்கள் கலந்துகொண்டனர். இரண்டு நாள் நிகழ்ச்சியில் செயற்கைகள் கோள்களின் வகைகள், அவை எவ்வாறு இயங்குகின்றன, அவற்றை நாம் எப்படி காண்பது, தொடர்ந்து அவற்றுடன் எப்படி தொடர்பை ஏற்படுத்துது, செயற்கை கோள்கள் மூலமாக மக்களுக்கு எப்படி நாம் உதவ முடியும் என்பன போன்ற பல தகவல்களை மாணாக்கர்களுக்கு சிறப்பாகவும், எளிமையாகவும், பல செயற்முறை விளக்கங்களுடனும் விளக்கினார் திருமிகு சுப்பிரமணி ஐயா அவர்கள்.
இது ஒரு முன்னோட்ட நிகழ்ச்சி என்று மட்டுமே கூற முடியும். அதாவது ஒரு கண் திறப்பு தான். இன்னும் பல கற்றுகொடுக்க வேண்டியுள்ளது. எதிர்வரும் மாதங்களில் இன்னும் சிற்ப்பான பல வானியல், வானியல் தொழில்நுட்பங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்திட திட்டமிட்டுள்ளோம்.
மேலும் விவரங்களுக்கு எங்களது சமூக வலை தளங்களை தொடரவும்..
நன்றி !