STEM Teachers Network - Application 2019

STEAM Teachers Nov 5, 2019

STEAM TEACHER NETWORK அறிவியல், தொழில்நுட்ப, கலை கல்விக்கான ஆசிரியர்கள் வலையமைப்பு

Open Space Foundationன் அன்பான வணக்கங்கள், அறிவியல், தொழில்நுட்பங்கள் மற்றும் கலை இவை அனைத்தும் மனிதர்களை மனிதர்களாக உணரச்செய்ததில் மிகவும் முக்கிய பங்குவகிக்கின்றன. அவற்றினை கற்றுக்கொடுக்கும் கல்வியாளர்களும் முக்கியத்துவம் பெருகிறார்கள் என்பதும் தனிச் சிறப்பு.

அறிவியல் கல்வியால் தனிச்சிறப்பு அடைந்துள்ள, வருங்காலத்தை வளர்த்தெடுக்கவுள்ள மாணவர்கள் படையை அறிவியலால் ஒண்றினைக்க நாம் சில வேலைகளை, அதுவும் நவீன அறிவியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை புரிந்துகொள்வதும் அவசியம் ஆகும். அதற்கான முயற்சி தான் இந்த வலைபின்னல்.

இங்கு நவீன அறிவியலில் ஏற்பட்டுள்ள பல மேம்பாடுகளையும், அறிவியல் கல்வியில் நாம் எவ்வாறு பங்களிப்பை செய்வது என்பன போன்றவற்றையும் கற்றுக்கொள்ளலாம், விவாதிக்கலாம், பயணிக்கலாம், சிந்திக்கலாம். ஆசிரியர்கள் வலைபின்னல் என்றவுடன் பள்ளிகூட, கல்லூரி ஆசிரியர்கள் என குறுகிக்கொள்ள வேண்டாம். இந்த வலைபின்னலில் அறிவியல் கல்வியின் மீது ஆர்வமுள்ள, அறிவியல் கல்விக்கு பங்களிப்பு செய்ய விருப்பமுள்ள நபர்கள் இணைந்துகொள்ளலாம்.

இணைந்து பயணிப்போம், மாற்றங்களை வென்றெடுப்போம்..

நன்றி

அன்புடன் சுரேந்தர் Open Space Foundation

Tags