தமிழில் விக்கிபீடியா எழுதுவது குறித்த பயிற்சி | Wikipedia writing in Tamil workshop - Expression of Interest Form

Aug 29, 2020

அனைவருக்கும் அன்பான அறிவியல் வணக்கம்,

நாம் அனைவருக்கும் ஏதேனும் சந்தேகம் வரும் போது முதலில் நாம் தேட துவங்குவது விக்கிபீடியாவில் தான். ஏனெனில் விக்கிபீடியாவில் கிடைக்காதது என்று எதுவும் இல்லை. அந்த அளவிற்கு தகவல்கள் எளிமையாகவும், இலவசமாகவும், சுதந்திர தன்மையுடனும் கிடைக்கின்றன. இந்த தகவல் மூலங்கள் யாவும் யாரோ ஒருவரால் கட்டமைக்கப்பட்டது அல்ல. பல தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியால் கிடைத்தது தான் இது. மற்ற தகவல் மூலங்களில் இருப்பதை விட விக்கிபீடியாவில் பல மொழிகளில் தகவல்கள் கிடைக்கின்றன. நமது தமிழிலும் கோடிக்கணக்கான தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை ஒரு பெருங்கடலில் விழுந்துள்ள ஒரு துளி மழைநீரைப் போல மிகவும் சிறியது. ஆகவே நமக்கு இன்னும் பல மழைத்துளிகள் தேவைப்படுகின்றன, விக்கிபீடியா எனும் கலைக்களஞ்சியத்தை தமிழால் நிரப்ப.

முதல் முயற்சியாக அறிவியல் கட்டுரைகளை எழுதுவதும், மொழிப்பெயர்ப்பதும், வடிவமைப்பதும் என ஒரு திட்டமிடலுடன் இந்த வேலைகளை துவங்க்கவுள்ளோம். நிச்சயம் நிறைய கற்றுக்கொள்ளமுடியும். உங்களது பொன்னான நேரம் நாளைய நமது சந்ததிகளின் அறிவுத்தேடலை பலவழிகளில் பூர்த்திசெய்யும். வாருங்கள் விக்கிபீடியா எனும் கலைக்களஞ்சியத்தை தமிழால் நிரப்புவோம்.



இந்த பயிற்சிபட்டரை ஒரு அறிமுக வகுப்புதான். இந்த வகுப்பில் பங்கேற்க வயது, பாலினம், தகுதி, பதிவுக்கட்டணம் என எந்த தடைகளும் இல்லை. உங்களுக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும்.

கல்வியானது வியாபாரமாகிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் பாமரனுக்கும் கல்வி கிடைக்கவேண்டுமெனில் விக்கிபீடியா போன்ற கட்டற்ற சுதந்திரமான கலைகளஞ்சியங்கள் அவசியம் தேவை.

வகுப்பில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் இந்த படிவத்தை நிரப்பவும். நிகழ்ச்சி இணையவழியாக (Online) நடைபெறும். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை பெறுத்தும், அனைவரின் பங்கேற்பையும் உறுதி செய்யும் வகையிலான இணையதளமும், தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு
சுரேந்தர் பொன்னழகர்,
Open Space Foundation
+91 8754778345
mail: openspace.hq@gmail.com
Web: https://openspacefoundation.in



Registration form link: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfbI0OJANgs_q0_D_Yj53rf4LAiwNONAeaHoIjb81pV0YEQwQ/viewform