Oldest signal from the universe's dark age

astronomy Jul 5, 2020

கட்டுரை :2 Oldest signal from the universe's Dark age

பிரபஞ்சத்தின் மிகப்பழமையான சமிஞ்சை (Signal) கிடைத்துள்ளது !!

அகண்டு விரிந்த இந்த பிரமாண்டமான பிரபஞ்சம் உருவாகி பல கோடி பில்லியன் ஆண்டுகள் (ஒரு பில்லியன் எனபது 100 கோடி ஆண்டுகள்) ஆகின்றன. சுமார் 12 பில்லியன் வருடங்களுக்கு முன்பு இந்த பிரஞசம் தனது இளம் பருவத்தினை அடையும் போது உருவான ஒருவகை ரேடியோ சமிஞ்சை (Signal) தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதுவரை நாம் கண்டறிதுள்ளவற்றில் மிகப்பழமையானது இந்த சமிஞ்சை. இன்னும் முழுமையடையாத இந்த ஆய்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வை “முர்சியன் வைட் ஃபீல்ட் அரேய்” (Murchison Widefield Array (MWA) ) எனும் ஆஸ்திரேலியவிலுள்ள ரோடியோ தொலை நோக்கி மூலமாக பதிவு செய்து வருகின்றனர்.

MWA எனும் இந்த ஆய்வு மையமானது சர்வதேச நிறுவங்களின் ஒருங்கிணைப்புடன் கட்டமைக்கப்பட்ட ஆய்வு நிறுவனம் ஆகும். இந்த ஆய்வு நிறுவனம் முழுவதுமாக மிக நுண்ணிய ரேடியோ சமிஞ்சைகளை ஆய்வு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இந்த ஆய்வு கட்டமைப்பின் மூலமாக 70-300 MHz அளவிலான ரேடியோ சமிஞ்சைகளை பதிவு செய்யலாம். இந்த கட்டமைப்பானது பிரபஞ்சத்தின் மறு அயனியாக்கல் சகாப்த (Epoch of Reionization (EoR)) கால கட்டத்தில் உருவாகியிருக்கும் இயற்கையான அணுநிலை ஹைட்ரஜன் வெளியேற்றத்தை (Neutral atomic Hydrogen emission ) கண்டறியும் அறிவியல் முக்கியத்துவத்துடன் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த ஆய்வு மையத்தின் மூலமாக சூரியனின் புறப்பரப்பு, பூமியின் வளிமண்டல அயனிமண்டலம் மற்றும் பிரபஞ்சம் ரேடியோ அலைகளையும் அவற்றின் அயனியாக்கள் கூறுகளையும் ஆய்வு செய்யவும் முடியும்.

இந்த ஆராய்ச்சியானது ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு ஆராய்ச்சியாகும். இதில் “வாசிங்டன் பல்கலைக்கழகம், மெல்பெர்ன் பல்கலைக்கழகம், கார்டின் பல்கலைக்கழகம் மற்றும் பிரௌன் பல்கலைக்கழகத்தை” சேர்ந்த விஞ்ஞானிகள் உள்ளனர்.

இந்த ஆய்வு முழுமையடையும் பொழுது பிரபஞ்சம் உருவான விதம், இளம் வயது பிரபஞ்சத்தில் இருந்த பொருட்களின் தன்மை போன்ற அறியப்படாத பல தகவல்களும் நமக்கு கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags