Geminid Meteor Shower - Live Track

astronomy Dec 13, 2020

இரவு மொட்டைமாடியில் ஜில்லென்று வீசும் காற்றை ரசித்துக் கொண்டு தூங்குபவரா நீங்கள். அப்படியெனில் நிச்சயம் ஒரு முறையாவது வானில் திடீரென்று தோன்றும் ஒளி கீற்றுகளை பார்த்து ரசித்திருப்பீர்கள். சில நாட்களில் மட்டும் தோன்றும் இந்த அழகிய நிகழ்வுகள் தன்னகத்தே பல அறிவியல் உண்மைகளை நமக்கு ஒழித்து வைத்திருக்கின்றன. அவற்றைஅ ஆராய்ந்து அறிந்திட பல விஞ்ஞானிகளும் ஏங்கித்தவிக்கின்றனர்.

நம்மால் விஞ்ஞானிகளாக முடியாவிட்டாலும், வானின் வர்ணஜாலத்தை கண்டு ரசிக்கலாம். நீங்களும் கூட சில கண்க்கீடுகளை செய்திடலாம். சிலருக்கு இது ஒரு பொழுது போக்காககூட அமையலாம். அந்த வகையில் எங்களுக்கு பிடித்த வானத்தில் நடக்கும் அற்புத காட்சியான ஜெமினிட் விண்கற்கள் தூரலை (Geminid Meteor Shower) எப்படி ரசிக்காமல் இருப்போம்.

பொதுவாக டிசம்பர் மாதத்தில் 6 - 14 ம் தேதிகளில் உச்சத்திலிருக்கும் இந்த விண்கற்களின் சாரல் பொழிவு. ஜெமினி எனும் மிதுன நட்சத்திர மண்டலம் தெரியும் பகுதியில் ஏற்படுவதால் இதற்கு ஜெமினிட் விண்கற்கள் தூரல் என்று பெயரிட்டுள்ளனர். இந்த விண்கற்கள் தூரலானது 3200-பேத்தோன் (3200 Phaethon) எனும் விண்கல் (Asteroid) பாதையை பூமி கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. இந்த பேத்தோன் விண்கல்லானது இதுவரை பெயரிடப்பட்ட விண்கற்களிலேயே சூரியனுக்கு மிக அருகில் சென்று வலம் வரும் விண்கல்லாகும். இதன் சூரிய அருகாமை (perihelion) தொலைவானது 0.14 AU (20.9 மில்லியன் கிலோமீட்டர்கள்) ஆகும். இந்த விண்கல்லானது புவியை மிகவும் வன்மையாக தாக்க வல்லமைகொண்டது (potentially hazardous asteroid (PHA)) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கல்லின் புவியுடைய வட்டபாதையுடனான குறைந்தபட்ச குறுக்கீட்டு சந்திப்பு தொலைவு  (minimum orbit intersection distance) 29,10,000 கிலோமீட்டர்கள் ஆகும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விண்கல்லை தொடர்ச்சியாக கண்காணித்ததன் விளைவாக அடுத்த 400 வருடங்களுக்கு இந்த விண்கல்லின் வட்டபாதை அமைவை விஞ்ஞானிகள் கணித்துவைத்துள்ளனர்.

இந்த விண்கல்லில் வட்டபாதையை புவி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம்  நடுப்பகுதியில் கடந்து செல்கிறது. அப்போது விண்கல்லின் எச்சங்களாக மிதந்துகொண்டிருக்கும் சிறிய அளவிலான தூசு போன்ற பொருட்கள் நமது வளிமண்டலத்தில் உராயும் போது தனது வர்ணஜாலங்களை அரங்கேற்றுகிறது. விண்கல் தூரல் உச்சமடையும் போது ஒரு மணி நேரத்தில் சுமார் 120 எரிகற்களை கூட கணக்கிட முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

டிசம்பர் 13 இரவு மொட்டை மாடியில் மட்டமலாக்க படுத்தபடி சுமார் 18 எரிகற்களை கண்டுரசித்தோம். இந்த முறை அவற்றை படம்பிடிக்கும் அளவிற்கு எங்களது தொழில்நுட்பம் வளரவில்லை. விரைவில் அவற்றை கற்றுக்கொண்டு அடுத்த விண்கற்கள் தூரலுக்குள் படம் எடுத்து பதிவு செய்கிறோம்.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் பதிவு செய்யவும். கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

Open Space Foundation | +91 8754778345 | contact@openspacefoundation.in

நன்றி !

Tags