வானம் கொட்டட்டும் #2: Introduction to Stellarium (Astronomy Software)

வானம் கொட்டட்டும் #2: விண்மீன்களை கண்டறிந்துகொள்வது எப்படி? மற்றும் வானியல் மென்பொருள் ஒரு அறிமுகம்
வானம் கொட்டட்டும் எனும் குழந்தைகளுக்கான வானவியல் நிகழ்ச்சியின் 2வது வார வகுப்பு நேற்று நடைபெற்றது. இந்த வகுப்பில் இரவு வானின் விண்மீன்களை கண்டறிவது எப்படி, வானவியல் மென்பொருட்கள் குறித்த அறிமுகமும் இடம்பெற்றது.
எப்போதும் குழந்தைகளின் ஆரவாரம் கற்றலின் போது மிகுந்து போகும். அப்படி இந்த வார நிகழ்ச்சியும் மிகுந்த ஆரவாரம் நிறைந்ததாக அமைந்தது. வகுப்பு எப்போதும் உயிர்ப்புடன் இருப்பதை நாம் உணர்ந்துகொள்ள அவ்வப்போது குழந்தைகளின் சேட்டைகளும் தேவைதான். அப்படி இந்தவாரம் மிகுந்த சேட்டை நிறைந்ததாகவும், அப்படி சேட்டை செய்யும் குழந்தைகள் தங்களது இருப்பை மீண்டும் மீண்டும் உறுதிபடுத்திகொள்ள முயன்றுகொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் தான் மிகவும் கவனிக்க பட வேண்டியவர்கள். அவர்களுக்கு ஒரு சிறு தூண்டுதல் போதும், அவர்களை கற்றலில் இணைத்துவிடலாம். இப்படியாக இந்தவார நிகழ்ச்சியானது மாணவர்களை புரிந்துகொள்ளும் விதமாகவும், கற்றுக்கொடுக்கும் விதமாகவும் ஒரு கலவையாக அமைந்தது.
இவற்றோடு விண்மீன்கள் தொகுதி குறித்த அறிமுகமும், அவற்றை அடையாளம் காணும் விதம் குறித்தும், அவற்றில் உள்ள விண்மீன்களை அடையாளம் காணும் தன்மை குறித்தும் மாணவர்களோடு விவாதிக்கப்பட்டது. மேலும் அவர்களாகவே எப்படி விண்மீன்களை பற்றி கற்றுக்கொள்வது, விண்மீன் தொகுதிகளை பற்றி அடையாளம் காண்பது என்பதற்கான வானவியல் மென்பொருட்களை அறிமுகம் செய்யப்பட்டது.





குழந்தைகளை செயல்பட வைப்பதும் எளிது. அதற்கேற்ப நாம் அவர்களோடு உரையாட வேண்டியுள்ளது. அப்படியாக சில செயல்பாடுகளை இந்த வாரம் கொடுத்துவந்துள்ளோம். அவர்களின் செயல்பாடுகளை காண ஆர்வமாக இருக்கிறீர்களா? வரும் மார்ச் மாதம் 6ம் தேதி அடுத்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காத்திருங்கள் !
உங்களது கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி
மேலும் விவரங்களுக்கு
Open Space Foundation
+91 8754778345 | contact@openspacefoundation.in | https://openspacefoundation.in