Jupiter Saturn Grand Conjunction - Live Stream
இதுவரை முயற்சித்திடாத வேலை. ஒரு வானவியல் நிகழ்வை முழுவதுமாக நேரலையில் பதிவிட்டது இதுவே முதல்முறை. எந்தவொரு செயலையும் முதன் முதலாக செய்திடும் போது ஏற்படும் பதற்றம் எங்கலையும் தொற்றிக்கொண்டது. இருந்தபோதிலும் இரண்டு நாட்களுக்கு முன்பே ஒரு முன்னோட்டமும் பார்த்து தான் வைத்திருந்தோம்.
நேரம் சரியாக 6.30 மணி இருக்கும், நிறைய நபர்கள் எங்களது YouTube சேனலில் வியாழன் - சனி கோள்களின் பேரிணைவு தோற்றத்தை பார்க்க காத்திருப்பது தெரிந்தது. நேரம் ஆக ஆக நிறைய நபர்கள் கலந்துகொள்ள துவங்கியது மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்தது. அந்த உத்வேகத்தோடு வேலையில் இறங்கினோம்.
இந்த நேரலை நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி. பலரும் நிகழ்ச்சி எளிமையாகவும், அனைவருக்கும் புரியும் வண்ணமும் இருந்ததாக கருத்துகளை பதிவு செய்திருந்தது மேலும் மேலும் மகிழ்ச்சியை தருவதாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஒளிபரப்ப உதவிய Chiguru CoLab நண்பர்களுக்கும், CSTERC - நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்கிறோம். இந்த நிகழ்ச்சியை முழுமையாக ஒளிபரப்ப OBS Studio எனும் கற்றற்ற மென்பொருள் பயன்படுத்தப்படது.
நேரலையை பார்க்க தவறிய நண்பர்கள், மேலே கானோலியை இணைத்துள்ளோம். அவசியம் பாருங்கள். உங்களது கருத்துகளையும் பதிவு செய்யவும்.
நன்றி !