Moon - Mars conjunction Live Stream @ YouTube
இரவு வானம் நமக்கு எப்போதுமே ஆச்சரியங்களையும், வர்ணஜாலங்களையும் கொடுத்துக்கொண்டே இருக்கும். இது போன்ற அசிதயங்களை காண கண்கோடி வேண்டும் என்பது போல நாம் மெய்மறந்து பார்த்து ரசித்துக்கொண்டிருப்போம்.
கடந்த டிசம்பர் 21-ம் தேதி நம் கண்களுக்கு இரு பெரும் வாயுகோள்களான வியாழனும், சனியும் (Jupiter & Saturn) ஒன்றோடு ஒன்று இணைவதை போன்ற தோற்றத்தை ஏற்ப்படுத்தி கண்களுக்கு விருந்தளித்தன. அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வு தான் இந்த நிலவு - செய்வாய் கொள் இணைவு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியானது பார்ப்பதற்கு அவ்வலவு பிரமிப்பூட்டுவதாக இல்லாவிட்டாலும் ஒரு அருமையான வானியல் நிகழ்வு எனலாம்.
அதாவது இரு வான் பொருட்கள் ஒரே நேர்கோட்டில், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் ஒரே வல எழுச்சி கோணத்தில் (Right ascension) அமையும் நிகழ்வுக்கு வான்பொருட்கள் இணைவு என்று பொருள். அந்த வகையில் வியாழன் - சனி கோள்களின் இணைவானது பேரிணைவாகும். ஏனெனில் அவை ஒரே வல எழுச்சி கோணத்தில் அமைந்தது மட்டுமல்லாது மிக குறுகிய இடைவெளியில் தோற்றமளித்தன. கிட்டத்தட்ட 0.1 டிகிரி இடைவெளி மட்டுமே இவற்றிற்கு இடையே இருந்தது. இப்படிப்பட்ட பேரிணைவு இதற்கு முன்பாக கலிலியோ காலகட்டத்தில் நடைபெற்றது. ஆனால் அந்த இணைவானது சூரியனின் மறைவுக்கு மிக அருகில் அமைந்ததால் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு பிறகு தற்போது தான் இந்த அரிய நிகழ்வு நமக்கு காண்கிடைத்தது.
அதே போன்ற ஒரு வான் நிகழ்வு தான் செவ்வாய் மற்றும் நிலவின் இணைவு. இவை இரண்டும் பிஸ்ஸஸ் எனும் விண்மீன் தொகுதியில் ஒரே வல எழுச்சி கோணத்தில் அமைந்தது. இவை இரண்டிற்கு இடைப்பட்ட கோண இடைவெளி 5 டிகிரி வரை அமைந்திருதது. இந்த இணைவை நாம் வெறும் கண்களாளேயே பார்க்க கூடிய அளவில் அமைந்தது.
இந்த வானியல் நிகழ்வை அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் திட்டமிட்டோம். அதற்கென ஒரு நேரலை நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்தினோம். இந்த நிகழ்ச்சிக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை Chiguru Co Lab மற்றும் CSTERC (Chiguru Centre for Science & Technology Education, Research and Communication) நண்பர்கள் செய்து கொடுத்தனர். இந்த நிகழ்ச்சி முழுமையாக OBS Studio எனும் கட்டற்ற மென்பொருள் மூலமாக பதிவிடப்பட்டது.
நேரலை பதிவானது கீழே இணைக்கப்பட்டுள்ளது. அவசியம் கண்டு ரசிக்கவும். ஆர்வமிருக்கும் நண்பர்கள் தொடர்புகொள்ளவும். ந்
Open Space Foundation - Ph: +91 8754778345 | contact@openspacefoundation.in
நன்றி !