The Breakthrough Listen Initiative !!!

astronomy Aug 7, 2020

கட்டுரை : 8

ஏலியன்களை தேடிக்கொண்டிருக்கும் தொலைநோக்கி  !!

பரந்து விரிந்துள்ள இந்த பிரமாண்ட பிரபஞ்சத்தில் நம்மைப்போல உயிர்கள் எங்கேனும் உள்ளனவா என்ற ஆய்வானது மிக நீண்டகாலமாகவே நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஒரு ஆய்வு திட்டமானது வேற்றுகிரகவாசிகள் என அழைக்கப்படும் ஏலியன்கள் எங்கேனும் உள்ளனவா? எனும் தேடலுடன் தனது தேடலை துவங்கியுள்ளது.

The Breakthrough Listen Initiative – எனும் ஆய்வுத் திட்டமானது நமது சூரியக்குடும்பத்தை போல வேறு ஏதேனும் விண்மீன் குடும்பங்கள் உள்ளனவா? அவ்வாறு இருப்பின் அவற்றில் உயிர்கள் உருவாகி வாழக்கூடிய சாத்தியம் உள்ள கோள்கள் உள்ளனவா? என்பன போன்ற ஆய்வுகளை செய்து வருகின்றன. சமீபகாலங்களில் உலக அளவில் பல விஞ்ஞானிகள் குழுக்கள் நமது சூரிய குடும்பத்தை போல விண்மீன் குடும்பங்கள் இருக்கின்றன என்பதையும் அவற்றில் சிலவற்றில் கோள்கள் இருப்பதையும், இன்னும் சில கோள்கள் விண்மீனிலிருந்து உயிர்கள் உருவாக சாத்தியமான் வட்டத்தில் அமைந்துள்ளன என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

இது போன்ற ஆய்வுகள் இந்த திட்டத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தின் மூலமாக சூரியன் தவிர்த்து பூமிக்கு அருகில் உள்ள சுமார் 10,00,000 விண்மீன்களை ஆய்வு செய்து அவற்றில் கோள்கள் உள்ளனவா? அவ்வாறு இருப்பின் அந்த கோள்கள் உயிர்கள் உருவாகக் கூடிய வட்டத்தில் உள்ளனவா? என ஆய்வு செய்ய துவங்கியுள்ளது.

சுமார் 10 ஆண்டுகள் வரை செல்லக்கூடிய இந்த ஆய்வானது சுமார் 10 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மிக பிரமாண்டமான ஆய்வுத் திட்டமாகும்.

இந்த திட்டத்தில் 4 முக்கிய தொலைநோக்கிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. அவையாவன,

1. 100 மீட்டர் கிரீன் பேங்க் தொலைநோக்கி - 100 Meters Green Bank Telescope

2. 64 மீட்டர் விட்டமுடைய பார்க்ஸ் தொலைநோக்கி - 64 Meters Dia Parkes Telescope

3. லிக் நோக்குகூடத்தின் கோள்களை கண்டறியும் தானியங்கி தொலைநோக்கி - Automated Planet Finder Telescope at Lick Observatory

4. மீர்க்கட் ரேடியோ தொலைநோக்கி - Meerkat Radio Telescope

இந்த பிரமாண்ட ஆய்வுத்திட்டமானது வெற்றிபெரும் பட்சத்தில் விண்வெளியில் உயிர்கள் குறித்த ஆய்வானது அடுத்தகட்டத்திற்கு செல்லும் என்பதில் ஐயமில்லை. வேற்றுகிரகவாசிகள் உள்ளனவா என்ற ஆய்வுத்திட்டத்தின் மூலம் வேற்றுகிரகவாசிகள் என்ற மாயையை உடைத்தெரியவும் இந்த ஆய்வு உதவும்.

நன்றி !

Tags