To new beginnings...

Feb 24, 2019

All truths are easy to understand once they are discovered; the point is to discover them. --Galileo Galilei
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.   --திருக்குறள்

திருவள்ளுவரின் வரிகளிலேயே துவங்குவோம். கல்வியென்பது ஒருவனது மிகப்பெரிய சொத்தாகும் என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கு இணங்க கல்வியை பட்டி தொட்டியெங்கும் எடுத்துச்செல்லும் முயற்சியே எங்களது இந்த நிறுவனம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வலர்களாக, மாணவர்களாக, தொண்டர்களாக பல துணை நிறுவனங்களோடும், அமைப்புகளோடும் இணைந்து தரமான ஆரோக்கியமான கல்வியை கிராமப்புற மாணவர்களுக்கு சேர்க்கும் வகையில் பணியாற்றி வந்தோம். இந்த பயணங்களின் நீட்ச்சியாக இன்னும் சிறப்பான கூறிய நோக்கங்கள் மற்றும் திட்டங்களோடும் கூடிய “Open Space Foundation” எனும் தன்னார்வ அமைப்பை கடந்த ஜூலை 2018ல் கட்டமைத்தோம்.

அது என்ன கூறிய திட்டங்கள் என்று கேட்கிறீர்களா? வாருங்கள், தொடந்து இந்த இணையத்தில் பதிவேற்றப்படும் பதிவுகளை வாசியுங்கள். மாற்றங்களை விரும்பும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் அன்பான வாசகர்களை எங்களது இணைய உலகிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

--
நன்றிகளோடு
இணையதள வடிவமைப்பு குழு,
Open Space Foundation

Great! You've successfully subscribed.
Great! Next, complete checkout for full access.
Welcome back! You've successfully signed in.
Success! Your account is fully activated, you now have access to all content.